மத்திய அரசு கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை
மத்திய அரசின் கொச்சி கப்பல் கட்டும் (Cochin Shipyard Limited) நிறுவனத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் கொச்சி கப்பல் கட்டும் (Cochin Shipyard Limited) நிறுவனத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் பணிஅனுபவமும்உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் விவரங்கள்:
தாள் உலோகம் வர்க்கர், வெல்டர், மெக்கானிக் டீசல், மெக்கானிக் மோட்டர் வாகனம், ப்ளம்மர், பெயிண்டர், எலெக்ட்ரிஷன், எலெக்ட்ரிக் மெக்கானிக், இன்ரூமெண்ட் மெக்கானிக், பிட்டர்
காலிப்பணியிடங்கள்: 224
132 இடங்கள் பொதுப் பிரிவினருக்கு, 52 இடங்கள் ஒபிசி இடங்கள், எஸ்சி பிரிவில் 18 இடங்கள், எஸ்டி பிரிவில் 4 இடங்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 18 இடங்கள் என மொத்தம் 224 இடங்கள் நிரப்பபடுகிறது.
வயது வரம்பு;
30.12.2024 தேதியின்படி, விண்ணப்பதார்கள் அதிகபடியாக 45 வயதைக் கடந்திருக்கக்கூடாது. விண்ணப்பதார்கள் 31.12.1979 தேதிக்கு பின்னர் பிறந்திருக்கக்கூடாது.
வயது தளர்வு:
எஸ்சி/எஸ்டி(SC/ST) - 5 ஆண்டுகள்
ஓபிசி(OBC) - 3 ஆண்டுகள்
கல்வித் தகுதி:தொழில் பிரிவுகளில் பதவிக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பின்னர் ஐடிஐ தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.
சம்பள விவரம்: ரூ.23,000 சம்பளம் வழங்கப்படும். மேலும், கூடுதல் பணி நேரத்திற்கு மாதம் ரூ.5,830 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழியாக தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://cochinshipyard.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600 ஆண்லைனில் செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.12.2024