இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய விமானப்படையில் 2025 ஆம் ஆண்டிற்கான அக்னிவீர்வாயு ஆள்சேர்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-12-19 10:20 GMT

இந்திய விமானப்படையில் 2025 ஆம் ஆண்டிற்கான அக்னிவீர்வாயு ஆள்சேர்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையில் இணைந்து பணியாற்ற விரும்பும் ஆர்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம்.

பணி: அக்னிவீர்வாயு (AGNIVEERVAYU INTAKE)

விண்ணப்பிப்பதற்கான தகுதி:

அக்னிவீர்வாயு தேர்விற்கு திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் 01.01.2005. முதல் 01.07.2008 தேதிகளுக்குள் பிறந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு; குறைந்த பட்சம் 18 ஆண்டுகள், அதிக பட்சம் 21 ஆண்டுகள்

கல்வித்தகுதி :

12-ம் வகுப்பில் இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

                                                                                                     அல்லது,

மூன்று வருட பொறியியல் பிரிவில் பட்டயச்சான்று பெற்றவர்கள் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடத்தில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

                                                                                                    அல்லது,

அறிவியல் அல்லாத 12-ஆம் வகுப்பு பயின்றவர்கள் ஆங்கிலப்பாடப்பிரிவில் 50 சதவீதமதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உடற் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை

விண்ணப்பக் கட்டணம்:

தேர்வுக் கட்டணம் ரூ. 550/- (ரூபாய் ஐந்நூற்று ஐம்பது மட்டும்) மற்றும் 18சதவீதம் ஜிஎஸ்டியை விண்ணப்பதாரர் ஆன்லைன் விண்ணப்பத்தின் போது நெட் பேங்கிங் மூலமாகவோ அல்லது விசா/ மாஸ்டர்/ ரூபே கிரெடிட்/ டெபிட் கார்டு/ யுபிஐ மூலமாகவோ செலுத்த வேண்டும்.

தேர்வுக் கட்டணத்தை வெற்றிகரமாகச் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே தேர்வுக்கான அனுமதி அட்டை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் பயன்முறை: https://agnipathvayu.cdac.in/AV/என்ற இணையதளத்தின் வாயிலாகஆன்லைனில் விண்னப்பிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி- 07-01-2025

ஆன்லைன் விண்ணப்ப இறுதி தேதி- 27-01-2025

மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தின் வாயிலாக அறியலாம். அல்லது, My IAF APP என்ற அலைபேசி விண்ணப்பபடிவத்தின் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.

 

Tags:    

மேலும் செய்திகள்