மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் அதிகாரி பணி
மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் (CWC) உள்ள நிரப்பப்பட உள்ள அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு, பொது விநியோகத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் (CWC) உள்ளபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணிஅனுபவமும்உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் விவரம்:
மேலாண்மை பயிற்சி (பொது)- 40, மேலாண்மை பயிற்சி (தொழில்நுட்பம்)- 13, கணக்காளர்- 09, கண்காணிப்பாளர் (பொது)- 22 ,இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்- 81, கண்காணிப்பாளர் (பொது) – SRD (NE)- 02, இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் - SRD (NE)- 10, ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - எஸ்ஆர்டி (லடாக் யூடி)- 02 .
காலிப்பணியிடங்கள்: 179
வயது வரம்பு :
குறைந்த பட்சம் 28 ஆண்டுகள்
அதிக பட்சம் 30 ஆண்டுகள் இது ஒவ்வொரு பணிக்கும் மாறுபடும்.
வயது தளர்வு:
எஸ்சி/எஸ்டி(SC/ST) - 5 ஆண்டுகள்
ஓபிசி(OBC) - 3 ஆண்டுகள்
கல்வி தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: https://cwceportal.com/careers/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
அறிவிப்பு வெளியான தேதி:13.12.2024
விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி:14.12.2024
விண்ணப்பத்திற்கான கடைசி தேதி:12.01.2025
இது குறித்து கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.