இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் காவலர்,தலைமை காவலர் பணி
இந்தோ -திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி..)காவலர்,தலைமை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.;
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் (ITBP) காவலர்,தலைமை காவலர் பணிக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 51
1. தலைமை காவலர்: (மோட்டார் மெக்கானிக்): 7 இடங்கள். சம்பளம்: ரூ.25,500-81,100. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் மோட்டார் மெக்கானிக்கல் பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்து குறைந்தது 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. காவலர்: (மோட்டார் மெக்கானிக்): 44 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மோட்டார் மெக்கானிக் டிரேடில் ஐடிஐ படித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 22.01.2925 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு:
எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும்,
ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
உடற்தகுதி:
ஆண்கள் குறைந்த பட்சம் 170 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 80 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ., சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். பெண்கள் குறைந்த பட்சம் 157 செ.மீ., உயரம் இருக்க வேண்டும்.
எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் குறைந்த பட்சம் 162.5 செமீ உயரம் மற்றும் மார்பளவு சாதாரண நிலையில் 76 செ.மீ., இருக்க வேண்டும். 5 செ.மீ., சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களும் உயரத்திற்கேற்ற எடை மற்றும் ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
தேர்ச்சி முறை: இந்தோ- திபெத் போலீஸ் படையினரால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, தொழில் திறன் தேர்வு, உடல் திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.01.2025.
மேலும் விவரங்களுக்கு