மத்திய ஆயுதப்படை மருத்துவ சேவைகள் துறையில் வேலைவாய்ப்பு
மத்திய ஆயுதப்படை மருத்துவ சேவைகள் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.;
இயக்குநர் ஜெனரல் ஆயுதப்படை மருத்துவ சேவைகள் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி, சம்பளம், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு முறை அனைத்தையும் இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்; 113
பணி விவரம்:
கணக்காளர் - 01, ஸ்டெனோகிராபர் தரம் II - 01,கீழ் பிரிவு எழுத்தர் - 11,ஸ்டோர் கீப்பர் - 24,புகைப்படக்காரர் - 01,தீயணைப்பு வீரர் -05, சமையல்காரர் – 04,ஆய்வக உதவியாளர் - 01,மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் - 29,டிரேட்ஸ்மேன் மேட் - 31,வாஷர்மேன் - 02,தச்சர் மற்றும் இணைப்பாளர் - 02,டின் ஸ்மித் – 01
கல்வி தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு :
குறைந்த பட்சம் 25 ஆண்டுகள்
அதிக பட்சம் 30 ஆண்டுகள் இது ஒவ்வொரு பணிக்கும் மாறுபடும்.
வயது தளர்வு:
எஸ்சி/எஸ்டி(SC/ST) - 5 ஆண்டுகள்
ஓபிசி(OBC) - 3 ஆண்டுகள்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு சோதனை, சுருக்கெழுத்து தேர்வு, வர்த்தக சோதனை
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கும் முறை: https://www.mod.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
அறிவிப்பு வெளியான தேதி: 07.01.2025
விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி: 07.01.2025
விண்ணப்பத்திற்கான கடைசி தேதி:06.02.2025
இது குறித்து கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.