பெல் நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000 முதல் 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.;

Update:2025-01-12 17:04 IST

சென்னை,

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் புரொபேஷனரி இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.

மாதம் சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வரை

மொத்த காலிப்பணியிடங்கள்: 350

பணி விவரம்;புரொபேஷனரி இன்ஜினியர் ( எலக்ட்ரானிக்ஸ்) - 200 புரொபேஷனரி இன்ஜினியர் (மெக்கானிக்கல்) - 150

கல்வி தகுதி:

I.இன்ஜினியர் எலக்ட்ரானிக்ஸ் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் பி இ/ பிடெக்/ பி.எஸ்.சி ஆகிய பட்டப்படிப்புகளில் ஒன்றை படித்து இருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்/ எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்/ டெலி கம்யூனிகேஷன் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்து படித்து இருக்க வேண்டும்.

II.மெக்கானிக்கல் பணியிடத்திற்கு இன்ஜினியரிங் டிகிரியில் மெக்கானிக்கல் பிரிவை எடுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 01.01.2025 தேதிப்படி 25 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

எஸ்.சி/எஸ்.டி 5 ஆண்டுகளும்,

ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும்,

பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வரம்பு 10 ஆண்டுகளும் வழங்கப்படும்.

தேர்வு முறை: கணினி வழி தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு நடைபெறும் இடங்கள்: கணினி வழியிலான ஆன்லைன் தேர்வை பொறுத்தவரை நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி?: விருப்பமும் கல்வி தகுதியும் இருக்கும் தேர்வர்கள் https://bel-india.in/job-notifications/ - என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணமாக ரூ.1,180 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி; 31/01/2025

மேலும் விவரங்களுக்கு

Tags:    

மேலும் செய்திகள்