ராணுவ ஆர்டனன்ஸ் கார்ப்ஸ் பிரிவில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?
ராணுவ ஆர்டனன்ஸ் கார்ப்ஸ் பிரிவில் (ARMY ORDNANCE CORPS) உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செகந்திராபாத்தில் செயல்பட்டு வரும் ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் தயாரிக்கும் ராணுவ ஆர்டனன்ஸ் கார்ப்ஸ் பிரிவில் (ARMY ORDNANCE CORPS) உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணிஅனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் விவரம்:
எம்.டி.எஸ்(MTS), டிரேட்ஸ்மேன் மேட், இளநிலை அலுவலக உதவியாளர் (JOA), சிவில் மோட்டார் டிரைவர் (OG), மெட்டீரியல் உதவியாளர் (MA), டெலி ஆபரேட்டர் கிரேடு-II, பயர்மேன், கார்பெண்டர் & ஜாய்னர், பெயிண்டர் & டெக்கரேட்டர்
காலிப்பணியிடங்கள்:723
சம்பளம் : ரூ. 18,000/- முதல் ரூ. 56,900/- வரை
வயது வரம்பு :
குறைந்த பட்சம் 18 ஆண்டுகள்
அதிக பட்சம் 27 ஆண்டுகள் இது ஒவ்வொரு பணிக்கும் மாறுபடும்.
வயது தளர்வு:
எஸ்சி/எஸ்டி(SC/ST) - 5 ஆண்டுகள்
ஓபிசி(OBC) - 3 ஆண்டுகள்
கல்வி தகுதி: 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை:
உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு,மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் இனையதளம் : https://aocrecruitment.gov.in/என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:பொது/ ஓபிசி/எஸ்சி/எஸ்டி(UR/ OBC/ SC/ ST)மற்றும் பிற விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
அறிவிப்பு வெளியான தேதி: 30.11.2024
விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி: 02.12.2024
விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 22.01.2025
இது குறித்து கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.