ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு

ஓமன் நாட்டில் பணிபுரிய தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2024-11-26 17:12 IST

சென்னை,

தமிழக அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"ஓமன் நாட்டில் பணிபுரிய Foundry Industry Background (Exposure in Melting & Moulding), மற்றும் Electrical Maintenance ஆகிய பணிகளுக்கு குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ITI மற்றும் Diploma தேர்ச்சி பெற்று இரண்டு வருட பணி அனுபவமுள்ள பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.35,000/- முதல் ரூ.40,000/-வரை வழங்கப்படும். மேலும், உணவு, இருப்பிடம் விமானப் பயணச்சீட்டு மற்றும் விசா, வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இந்நிறுவன இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவச்சான்றிதழ்

மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலினை 10.12.2024 தேதிக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள் (044-22505886/22502267) மற்றும் வாட்ஸ்ஆப்எண் (9566239685) வாயிலாக அறிந்து கொள்ளலாம். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒரு அரசு நிறுவனம் என்பதால் இந்த நிறுவனத்தின் கீழ் எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜண்டுகளோ எவரும் இல்லை. ஆகவே விருப்பம் உள்ளவர்கள் நேரடியாகவே இந்நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தேர்ச்சி பெற்றவர்கள் சேவைக் கட்டணமாக ரூ. 35,400/-மட்டும் இந்நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்