மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம்

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.;

Update: 2024-09-19 23:14 GMT

சென்னை,

தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில், கடந்த மாதம் (ஆகஸ்டு) 16-ந்தேதி முதல் தலைவர் பதவியில் காலியிடம் ஏற்பட்டுள்ளது. இந்த பதவியை நிரப்புவதற்காக சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் அரசு தலைமை செயலாளர் மற்றும் மத்திய மின்சார அதிகார அமைப்பின் தலைவர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட தேர்வுக்குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது. தேர்வுக்குழு முடிவின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் தலைவர் பதவியினை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கடந்த 16-ந்தேதி வரை வரவேற்கப்பட்டது.

இந்த நிலையில், தேர்வு குழுவின் முடிவுபடி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும் விவரங்கள் https://www.tn.gov.in/department/7ல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்