இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் உதவி கமாண்டன்ட் பணி

இந்தோ -திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி..)உதவி கமாண்டன்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.;

Update: 2024-11-30 14:14 GMT

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் (ITBP) உதவி கமாண்டன்ட் பணிக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 27

பணி: உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (உதவி கமாண்டன்ட்/ கால்நடை மருத்துவம்)Assistant Surgeon (Assistant Commandant/ Veterinary)

கல்வி தகுதி:

i.அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ii. இந்திய கால்நடை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 35-க்கு மிகாமல் இருக்க வேண்டும்

வயது தளர்வு:

ஓ.பிசி(கிரீமி லேயர்) OBC (Non Creamy Layer) - 3 ஆண்டுகள்

எஸ்.சி-எஸ்.டி(SC & ST )- 5 ஆண்டுகள்

முன்னாள் படைவீரர்கள் (பொது)இராணுவ சேவையிலிருந்து 03 வருடங்கள் கழித்து

முன்னாள் ராணுவத்தினர் (ஓ.பிசி(கிரீமி லேயர்) Ex-Servicemen OBC (Non Creamy Layer)- 6 ஆண்டுகள்

முன்னாள் ராணுவத்தினர் (எஸ்.சி-எஸ்.டி)Ex-Servicemen(SC & ST ) - 8 ஆண்டுகள்

துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள்(Department Candidate )-5 ஆண்டுகள்

தேர்வு முறை:

உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு,மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் விண்ணப்பிக்க தேதி ஆரம்பம்: 25 நவம்பர் 2024 (அதிகாலை 1:00)

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:24 டிசம்பர் 2024 (இரவு 11:59)

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://recruitment.itbpolice.nic.in.

விண்ணப்பிக்க: https://recruitment.itbpolice.nic.in/rect/applicant-profile-details/applicant-login

விண்ணப்பக் கட்டணம்:

பொது பிரிவினர்,ஓபிசி,ஈடபிள்யூஎஸ் (UR) / OBC / EWS ரூ.400 ஆண்லைனில் செலுத்த வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர்,பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்