நீர்க்கடுப்பு ஏற்படுவது ஏன்? இதற்கு தீர்வு என்ன?
சிறுநீரக கற்கள் காரணமாக நீர்க்கடுப்பு இருந்தால், கற்களின் அளவை பொறுத்து சிகிச்சை மாறுபடும்.;
நீர்க்கடுப்பு என்பது சிறுநீர் கழிக்கும் போது வலி, அசௌகரியம் அல்லது எரிச்சல் ஏற்படக்கூடிய ஒரு உணர்வாகும். இது ஆங்கிலத்தில் டிசுரியா (Dysuria)என்று அழைக்கப்படுகிறது. இது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. சிறுநீர் கடுப்புக்கு முக்கிய காரணமாக கீழ்கண்டவை கருதப்படுகின்றன.
1) சிறுநீர் பாதை தொற்று.
2) சிறுநீர்ப்பை தொற்று
3) புரோஸ்டேட் சுரப்பி தொற்று
4) இன்டர்ஸ்டீடியல் சிஸ்டைடிட்ஸ்
5) சிறுநீர்வழித் தொற்று.
6) சிறுநீரக கற்கள்
7) சிறுநீர்ப்பை கற்கள்.
8) மருந்துகளின் பக்கவிளைவு (டைக்கார்செலின், பெனிசிலின் ஜி, சைக்கிலோபாஸ்பமைட்)
9) புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சை
11) சிறுநீர்ப்பை புற்று நோய்
12) சோப்பு மற்றும் லோஷனில் உள்ள ரசாயனங்களால் ஏற்படும் ஒவ்வாமை.
இதற்கு தீர்வாக தினசரி குறைந்தபட்சம் 3 அல்லது 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும் இஞ்சி, ஏலக்காய் மற்றும் வைட்டமின் சி அதிகமுள்ள ஆரஞ்சு, பச்சை பூகோஸ் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிக காரமான உணவு, அமிலம் அதிகமுள்ள உணவு, காபி, செயற்கை குளிர்பானங்கள் மற்றும் மதுபானங்களை தவிர்க்க வேண்டும். சிறுநீர் பாதை தொற்றுக்கு பாக்டீரியா ஒரு காரணமாக இருந்தால் மருத்துவர் உங்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைக்கலாம். சிறுநீரக கற்கள் காரணமாக நீர்க்கடுப்பு இருந்தால், கற்களின் அளவை பொறுத்து சிகிச்சை மாறுபடும்.
நீர்க்கடுப்பு பிரச்சினை ஏற்படும்போது மருத்துவரை கலந்து ஆலோசித்து உரிய பரிசோதனைகளை செய்து அதற்கு தகுந்த மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.