தோலில் தோன்றும் வெண் புள்ளிகள் நீங்க சித்த மருத்துவம்

கார்போகரிசி பசையை வெண்புள்ளி உள்ள இடங்களில் பூசி சிறிது நேரம் வெயிலில் நிற்க வேண்டும்.;

Update:2025-01-09 18:04 IST

தோலின் எபிடெர்மிஸ் பகுதியில் உள்ள மெலனோசைட்ஸ் என்னும் செல்கள் தோலுக்கு நிறத்தை தருகின்ற "மெலனின்" என்ற நிறமியை உருவாக்குகிறது. இந்த மெலனோசைட்ஸ் செல்கள் மெலனின் நிறமியை உருவாக்காமல் இருக்கும் நிலையை தான் வெண்புள்ளி என்கிறோம்.

காரணங்கள்:

1. உடலின் நோய் எதிர்ப்பாற்றல் தவறுதலாக சொந்த செல்களை பாதிப்படைய செய்வதால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள மெலனோசைட்ஸ் மெலனின் நிறமியின் உற்பத்தியை நிறுத்துகிறது. இதை ஆட்டோ இம்யூன் வகை எனக் கூறலாம்.

2. வைட்டமின் பி குறைபாடுகள், தைராய்டு சுரப்பி நோய்கள், தீப்பட்ட காயங்களால் மெலனோசைட்ஸ் செல்கள் அழிவது போன்ற காரணங்களால் வெண்புள்ளி வருகிறது.

சித்த மருத்துவம்:

1. கார்போகரிசி பசையை வெண்புள்ளி உள்ள இடங்களில் பூசி சிறிது நேரம் வெயிலில் நிற்க வேண்டும்.

2. கருஞ்சீரகத்தை வறுத்து பொடி செய்து காலை, இரவு ஒரு கிராம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.

3. கரிசாலை சூரணம் -1 கிராம், இருநெல்லி கற்பம் -100 மிகி, அயபிருங்க ராஜ கற்பம் -100 மிகி, பலகரை பற்பம் -200 மிகி மூன்று வேளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

 

Tags:    

மேலும் செய்திகள்