ஆஸ்துமா என்னும் இரைப்பு நோய்க்கு சித்த மருத்துவம்
ஆஸ்துமா நோய் குணமாக, சுவாசகுடோரி மாத்திரை 1-2 வீதம் காலை, மதியம், இரவு என 3 வேளை உணவுக்கு பின் சாப்பிடலாம்.
இரைப்பு நோய் (ஆஸ்துமா) என்பது மூச்சு விடுவதற்கு சிரமத்தை தருகின்ற நோய் ஆகும். நுரையீரலுக்குள் நூற்றுக்கணக்கான காற்றுக் குழாய்கள் உள்ளது பெரிதாக உள்ள காற்று குழாய்களுக்கு பிராங்கை என்றும், சிறிய காற்றுக் குழாய்களுக்கு பிராங்கியோல்ஸ் சென்று பெயர்.
இந்த காற்று குழாய்களை இயக்கும் தசைகள் தான், இவை சுருங்கவும் விரியவும் செய்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றானது இந்த காற்றுக் குழாய்களின் வழியே சென்று நுரையீரல்களில் உள்ள கோடிக்கணக்கான மிகச் சிறிய பலூன் போன்ற காற்று பைகளுக்குள் நிரம்புகிறது, இந்த சிறிய காற்றுப் பைகளுக்கு "ஆல்வியோலை"என்று பெயர்.
இரைப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுக்காற்றை சுவாசித்து, வெளிவிடுவதற்கு முயற்சிக்கும் போது காற்றுக் குழாய்கள் விரிவடைவதற்கு பதிலாக, தசைகளின் இறுக்கத்தால் சுருங்கி விடுகின்றன, இதற்கு "பிராங்கோஸ்பாசம்"என்று பெயர், இதனால் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும், இதையே இரைப்பு (ஆஸ்துமா) என்கிறோம்.
நோய்க்கான காரணங்கள்:-
1. பாரம்பரியம்
2. காற்றிலுள்ள தூசிகளின் ஒவ்வாமை (மகரந்தத் தூள், கழிவுப் பொருட்கள், சில கெமிக்கல் பொருட்கள்)
3. புகை,பனி, குளிர் காற்று, காற்று மாசுபாடு, வாசனைப் பொருட்கள், குறிப்பிட்ட உணவுகள்
4. ஹிஸ்டமின்அசைட்டைல் கோலைன் ரத்தத்தில் அதிகரிக்கும்போது
5. உடலின் நோயெதிர்ப்பு அமைப்பில் உள்ள மாறுபாடுகளால் ரத்தத்தில் "இம்முனோகுளோபுலின் ஈ" அதிகரித்து இருப்பது
6. தீவிர உடற்பயிற்சி, மிகவும் உயர்ந்த மலைப் பிரயாணங்கள், தீவிர இதய நோய், தீவிர சிறுநீரக நோய், மற்றும் நுரையீரலை தீவிரமாக பாதிக்கும் பாக்டீரியா, வைரஸ் நோய்கள் போன்ற பல காரணங்களால் இரைப்பு நோய் வருகிறது.
சித்த மருத்துவம்:-
1. இரைப்பு நோயைக் குணப்படுத்த சித்த மருத்துவத்தில் துளசி, ஆடாதோடை, கஞ்சாங்கோரை, கரிசலாங்கண்ணி, கண்டங்கத்திரி, தூதுவளை, நஞ்சறுப்பான் என ஏராளமான மூலிகைகள் உள்ளன. சித்தா செய் மருந்துகளில்; தாளிசாதி சூரணம் -1 கிராம், கஸ்தூரி கருப்பு -100 மி.கிராம், சிவனார் அமிர்தம்-100 மிகி, பவள பற்பம் -100 மி. கிராம் இவற்றை தேன் அல்லது வெந்நீரில் மூன்று வேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.
2. சுவாசகுடோரி மாத்திரை 1-2 வீதம் காலை, மதியம், இரவு என 3 வேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.
3. கஸ்தூரி மாத்திரை 1-2 வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.
4. கண்டங்கத்திரி லேகியம், தூதுவளை நெய், ஆடாதோடை மணப்பாகு இவற்றில் ஒன்றை காலை, இரவு உணவுக்கு பின் எடுத்துக் கொள்ள வேண்டும்.
5. குளிர்ந்த பொருள்கள் சாப்பிடுதல், பனிக் காற்றில் நடமாடுதல், ஊதுவத்தி, கொசுவத்தி சுருள்கள், புகைப்பழக்கம், ஒட்டடை அடித்தல் போன்றவற்றை இரைப்பு நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.