சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து மாங்கொட்டை பருப்பு

மாங்கொட்டையின் பருப்பு ரத்தச் சர்க்கரையின் அளவை குறைப்பது மட்டுமில்லாமல், தலைப்பொடுகு, முடி உதிர்தல், முடி நரைத்தல் ஆகியவற்றையும் தடுக்கிறது.

Update: 2024-08-07 06:54 GMT

மாங்கொட்டையின் பருப்பில் வைட்டமின் பி6, வைட்டமின் ஈ, அமினோ அமிலங்கள், நார்ச்சத்து, புரதம், மற்றும் ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ் அதிகமாக இருக்கின்றன. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் செரிமானத்தை தாமதப்படுத்தி ரத்தச் சர்க்கரையின் அளவை, சாப்பிட்டபின் உடனே அதிகமாகாமல் தடுக்கிறது.

மேலும் மாம்பழ கொட்டையின் பருப்பு, கல்லீரல் மற்றும் சிறுங்குடலில் உள்ள நொதிகளை மாற்றி குளுக்கோஸ் ரத்தத்தில் உறிஞ்சுவதை குறைத்து, ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. மாம்பழ கொட்டையின் பருப்பு ரத்தத்தில் எல்.டி.எல் கொலஸ்ட்ராலை குறைத்து, உடல் பருமனையும் குறைக்கிறது. உடல் பருமன் குறைவதால் இன்சுலின் எதிர்மறை நிலை(இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்) குறைந்து, இன்சுலின் திறம்பட செயல்பட்டு, அதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது. மேலும் இது உடலில் உள்ள செல்களின் அழற்சியையும் குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மாங்கொட்டையின் பருப்பு ரத்தச் சர்க்கரையின் அளவை குறைப்பது மட்டுமில்லாமல், இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்புகள், தலைப்பொடுகு, முடி உதிர்தல், முடி நரைத்தல் ஆகியவற்றையும் தடுக்கிறது. இத்தகைய நன்மைகளை பெற்றிருக்கும் மாம்பழ கொட்டையின் பருப்பை சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.

 

Tags:    

மேலும் செய்திகள்