தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஏப்.7-ல் மகா கும்பாபிஷேகம்

தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது.;

Update:2025-03-24 16:42 IST
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில்

கடந்த 15ம் நூற்றாண்டில் தென்காசி பகுதியை ஆண்ட பராக்கிரமபாண்டிய மன்னரால் வடக்கே கங்கை கரையில் அமைந்துள்ள காசிவிசுவநாதர் தெற்கில் உள்ளவர்களும் தரிசிக்கும் வண்ணம் தென்காசி சிற்றாற்றின் கரையில் காசி விஸ்வநாதர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் திருப்பணிகள் நடைபெற்று 19 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகா மண்டபம், பிரகார மண்டபம், கொடிமரம், மாடமதில், ராஜகோபுரம், விமான கோபுரங்கள், சுதை வேலை, பஞ்சவர்ணம் பூசுதல், ஸ்தூபி ஸ்தாபனம், தீர்த்தக்குளம் என பல்வேறு திருப்பணிகள் புனரமைக்கப்பெற்று ஏப்ரல் மாதம் 7ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவையொட்டி ஏப்ரல் 3-ம் தேதி யாகசாலை பூஜை தொடங்குகிறது. கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்