தமிழில் வெளியாகும் 'டெட்பூல் & வோல்வரின்'

வோல்வரின் மற்றும் டெட்பூல் பாத்திரங்களை ஒன்றிணைத்து 'டெட்பூல் & வோல்வரின்'என்ற படம் உருவாகியுள்ளது.

Update: 2024-07-05 05:39 GMT

சென்னை,

மார்வெல் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, அவெஞ்சர்ஸ் படம் அனைவருக்கும் பிடித்த படமாக உள்ளது. அதில் வரும் ஹீரோக்களுக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அயர்ன் மேன், ஹல்க், தோர், ஸ்பைடர் மேன், கேப்டன் அமெரிக்கா, நடாசா உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு இணையாக வோல்வரின் மற்றும் டெட்பூல் கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது, வோல்வரின் மற்றும் டெட்பூல் பாத்திரங்களை ஒன்றிணைத்து 'டெட்பூல் & வோல்வரின்'என்ற படம் உருவாகியுள்ளது. இது இதற்கு முன்னதாக வந்த டெட்பூல் மற்றும் டெட்பூல் 2 ஆகிய படங்களின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.


இதனை பிரபல இயக்குனர் ஷான் லெவி இயக்கியுள்ளார். இதில், ஹியூ ஜேக்மேன் வோல்வரினாகவும் ரியான் ரெனால்ட்ஸ் டெட்பூலாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில், 'டெட்பூல் & வோல்வரின்' திரையரங்குகளில் வரும் 26-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்