ரன்வீர் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்து அக்சய் குமார் வெளியிட்ட வீடியோ வைரல்
ரன்வீருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை அக்சய் குமார் பகிர்ந்துள்ளார்.;
புதுடெல்லி,
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ரன்வீர் சிங். இவர் பத்மாவத் படத்தில் வில்லத்தனமான வேடத்தில் நடித்து பிரபலமானார். ரன்வீர் சிங் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் மட்டும் நலம் விரும்பிகள் அனைவரிடம் இருந்தும் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் வாழ்த்துகள் குவிந்தன.
பாலிவுட் பிரபலங்களான அக்ஷய் குமார், சோனம் கபூர், ரகுல் ப்ரீத் சிங், திரைப்பட தயாரிப்பாளர் அட்லீ மற்றும் பலர் நடிகர்கள் ரன்வீர் சிங்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.
ரன்வீருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை அக்சய் குமார் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அக்சய் மற்றும் ரன்வீர் சிங் இருவரும் கரண் அவுஜ்லாவின் பிரபலமான பாடலான 'ஷாப்ட்லி' பாடலுக்கு நடனமாடுகின்றனர். அந்த வீடியோவுடன், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் , நீங்கள் ஒரு மனிதனின் சக்தி வீடு! என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
இவர்கள் இருவரும் இணைந்து 'சூரியவன்ஷி' மற்றும் 'சிங்கம் அகெய்ன்' படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.