கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி
மானாமதுரையில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்ற கங்கை அமரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.;
மதுரை,
தமிழில் ஒரு விடுகதை ஒரு தொடர்கதை என்ற படத்தின் மூலம் 1979-ஆம் ஆண்டு இசைமையப்பாளராக திரைத் துறையில் அறிமுகம் ஆனார் கங்கை அமரன். பின்னர் கோழிக் கூவுது படத்தின் மூலம் 1982-ல் இயக்குநராக அறிமுகமானார். பல படங்களுக்கு பாடல்களை எழுதிய அவர், பாடல்களையும் பாடியுள்ளார்.
தற்போது 77 வயதாகும் கங்கை அமரன், புதிய படத்தில் நடித்து வருகிறார். சிவகங்கை சிற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர், மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
மானாமதுரையில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்ற கங்கை அமரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு, மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.