நிலநடுக்கம் ஏற்பட்டபோது... நடிகை மணீஷா கொய்ராலா துணிச்சலாக செய்த விசயம்
நேபாள எல்லையை ஒட்டி இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டபோது, நடிகை மணீஷா கொய்ராலா துணிச்சலாக செய்த விசயம் பரபரப்பாக பேசப்படுகிறது.;
புதுடெல்லி,
சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லையையொட்டி இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி இருந்தது. 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து, 6 நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன.
இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. இதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 62 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டபோது, நடிகை மணீஷா கொய்ராலா துணிச்சலாக செய்த விசயம் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதுபற்றி இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட வீடியோவில், உடற்பயிற்சி சாதனத்தின் மீது நடைப்பயிற்சி செய்தபடி காணப்பட்டார். பேஸ்பால் விளையாட்டுக்கான தொப்பி அணிந்தபடியும், ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதற்கான ஆரஞ்சு நிற பேண்ட் மற்றும் குளிர்காலத்திற்கு அணியும் ஆடையை அணிந்தபடியும் செல்பி எடுத்து அதனை பகிர்ந்து உள்ளார்.
அவர் டிரெட்மில் எனப்படும் நடைப்பயிற்சிக்கான சாதனத்தில் நடந்தபடி காணப்படுகிறார். காலையில் நிலநடுக்கம் எங்களை எழுப்பி விட்டது என அதற்கு தலைப்பும் கொடுத்திருக்கிறார்.