'என் கெரியரில் பெரிய படம் 'கேம் சேஞ்சர்'- அஞ்சலி
கேம் சேஞ்சர் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி நடிகை அஞ்சலி பகிர்ந்துள்ளார்;
சென்னை,
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் கேம் சேஞ்சர். கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 10-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி நடிகை அஞ்சலி பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'கேம் சேஞ்சர்' படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் பார்வதி, என் அம்மாவின் பெயரும் பார்வதிதான். ஷங்கர் என்னிடம் கதை சொல்லும்போது, அந்தக் கதாபாத்திரத்தின் பெயரைச் சொன்னதும் அம்மாவை நினைவுப்படுத்தியது.
இந்த கதாபாத்திரத்திற்காக என்னிடமிருந்து பெரும் முயற்சி தேவைப்பட்டது. அதனை பூர்த்தி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன் என்று நம்புகிறேன். கேம் சேஞ்சர் என் கெரியரில் பெரிய படமாக இருக்கும்' என்றார்.