வைரலாகும் நடிகர் அஜித்தின் துபாய் வீடியோ

கார் ரேஸிங்கில் கலந்துகொள்வதற்காக நேற்று அஜித் துபாய் சென்றார்.;

Update:2025-01-07 10:28 IST

துபாய்,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானவர் அஜித்குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்துள்ளார். இதில் குட்பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

அஜித் நடிப்பு மட்டுமில்லாமல் பைக் மற்றும் கார் ஓட்டுவதிலும் அதிக ஆர்வம் உள்ளவர் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். சமீபத்தில் 'அஜித்குமார் ரேஸிங்'என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி அஜித், தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகி்றார்.

அதன்படி கார் ரேஸிங்கில் கலந்துகொள்வதற்காக நேற்று அஜித் துபாய் சென்றார். இந்நிலையில், அங்கு தனது அணியினருடன் அஜித் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கார் ரேஸிங்கில் அஜித் களமிறங்க உள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்