'எனக்கு பிடித்த நடிகை அவர்தான்' - ராம் சரண்

கேம் சேஞ்சர் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார்.;

Update:2025-01-08 06:47 IST

சென்னை,

இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கி உள்ளார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இதன் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி, நந்தமுரி பாலகிருஷ்ணா தொகுப்பாளராக இருக்கும் அன்ஸ்டாப்பபிள் என்பிகே என்ற நிகழ்ச்சியின் 4-வது சீசனில் படத்தின் புரமோஷனுக்காக கலந்துகொண்டனர்.

அப்போது பாலகிருஷ்ணா, ராம் சரணிடம், கியாரா அத்வானி, சமந்தா மற்றும் ஆலியா பட் ஆகியோரின் பெயரை கூறி இதில் யார் சிறந்த நடிகை என்று கேட்டார். அதற்கு ராம் சரண், தனக்கு பிடித்த நடிகை என்று சமந்தாவை கூறினார்.

ராம் சரண் மற்றும் சமந்தா இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்