வருண் தவானை ஷாருக்கானுடன் ஒப்பிட்ட பிரபல பாலிவுட் நடிகர்

நடிகர் ராஜ்பால் யாதவ், 'பேபி ஜான்' படம் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.;

Update:2025-01-08 07:58 IST

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான். இவர் தற்போது அட்லி தயாரித்த பேபி ஜான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கடந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையண்று வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்திருக்கிறது.

இந்நிலையில், பிரபல பாலிவுட் காமெடி நடிகர் ராஜ்பால் யாதவ், அட்லியின் 'பேபி ஜான்' படம் பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில்,

'கடந்த சில வருடங்களாக வருண் தவானின் கெரியர் குழப்பத்தில் உள்ளது. வெற்றியைத் தேடி, வருண் தவான் பல வகையிலும் முயன்று வருகிறார். அந்த வகையில், கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியான 'பேபி ஜான்' மூலம் கம்பேக் கொடுக்க முயன்றார். இருப்பினும், வருணின் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

வருண் ஒரு கடின உழைப்பாளி. அவர் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பார். அதற்காக ரசிகர்களும் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஷாருக்கானைபோல சவாலான வேடங்களில் நடிக்க விரும்பும் நல்ல நடிகர் அவர். வருண் விரைவில் கம்பேக் கொடுப்பார் என்று நான் நினைக்கிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்