'சங்கராந்திகி வஸ்துன்னம்'-வெங்கடேஷ் இல்லை...இயக்குனர் முதலில் அணுகியது இந்த டாப் ஹீரோவையா?
வெங்கடேஷ் நடித்துள்ள 'சங்கராந்திகி வஸ்துன்னம் 'படம் வரும் 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.;
சென்னை,
பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ். இவர் தற்போது நடித்துள்ள படம் 'சங்கராந்திகி வஸ்துன்னம் '. அனில் ரவிபுடி இயக்கி இருக்கும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ், உபேந்திரா லிமாயி, சாய் குமார், நரேஷ், வி.டி.வி கணேஷ் மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசராலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பீம்ஸ் சிசிரோலியோ இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்க வெங்கடேஷை இல்லை, டாப் ஹீரோவான சிரஞ்சீவியைதான் முதலில் அணுகினேன் என்று இயக்குனர் அனில் ரவிபுடி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"ஆரம்பத்தில், மெகாஸ்டார் சிரஞ்சீவியை வைத்து இந்தப் படத்தை உருவாக்க நினைத்தேன், ஆனால் அவர் மற்ற படங்களில் பிஸியாக இருந்தார். மேலும், இந்தப் படத்தை சங்கராந்திக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது எனது திட்டம், எனவே வெங்கடேஷை அணுகினேன்' என்றார்.