ஸ்பை-திரில்லர் கதைக்களத்தில் இணைந்த 'பேபி ஜான்' பட நடிகை

வாமிகா கபியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.;

Update:2025-01-08 06:23 IST

மும்பை,

பஞ்சாபி மற்றும் இந்தி படங்களில் நடித்து வருபவர் வாமிகா கபி. இவர் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'ஜப் வி மெட்' என்ற இந்தித் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, 'து மேரா 22 மெயின் தேரா 22' படத்தில் யோ யோ ஹனி சிங் மற்றும் அமரீந்தர் கில் ஆகியோருடன் சேர்ந்து நடித்ததன் மூலம் இவருக்கு பெரிய பெயர் கிடைத்தது.

தொடர்ந்து, 'இஷ்க் பிராண்டி' , 'நிக்கா ஜைல்டார் 2' , 'பராஹுனா', 'தில் தியான் கல்லன்' , 'நிக்கோ ஜைல்டார் 3' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்த மாதம் வெளியான கீர்த்தி சுரேஷ், வருண் தவான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த 'பேபி ஜான்' படத்தில் இவர் நடித்திருந்தார்.

இந்நிலையில், இவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, கடந்த 2018-ம் ஆண்டு அதிவி சேஷ் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஸ்பை-திரில்லர் படமான கூடாச்சாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் வாமிகா கபி இணைந்துள்ளார்.

வினய் குமார் சிரிகினீடி இயக்கும் இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்திருந்த அதிவி சேஷுடன் இம்ரான் ஹாஷ்மி நடிக்கிறார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இதன் டீசர் இந்த மாத இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்