போராட்டம் எதிரொலி.. நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்
வங்காளதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்த சூழலில், பாதுகாப்பு நடவடிக்கையாக, டாக்கா அரண்மனையை விட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் ஷேக் ஹசீனாவை அஜித் தோவல் சந்தித்துள்ளார். கலவரம் காரணமாக வங்காள தேசத்தில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
வங்காளதேசத்தில் இருந்து பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேறிய நிலையில், போராட்டக்காரர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குள் புகுந்து சூறையாடினர்.
வங்காள தேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் இந்தியா - வங்காள தேசம் இடையேயான ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.
வங்காள தேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டாம் என ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அந்நாட்டு ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் உத்தரவிட்டுள்ளார்.
வங்காளதேசத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், டாக்காவுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுத்தி உள்ளது.
இந்தியா வந்தடைந்த ஷேக் ஹசீனா, விரைவில் லண்டன் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு கருதி நாட்டைவிட்டு வெளியேறிய வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் பயணம் செய்த ராணுவ விமானம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. அவரை ராணுவ அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
நாட்டை ஆட்சி செய்ய இடைக்கால அரசு அமையும் என ராணுவ ஜெனரல் வேகர்-உஜ்-ஜமன் தேசத்திற்கு உரையாற்றியபோது கூறியுள்ளார். இடைக்கால அரசுக்கு ராணுவம் ஆதரவாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
வங்காள தேசத்தில் சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு அமைவதாக ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். இடைக்கால அரசின் பிரதமராக சலிமுல்லா கான் செயல்படுவார் என அவர் கூறியுள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல்கள் என 10 பேர் கொண்ட அமைச்சரவை அமைகிறது.