போராட்டம் எதிரொலி.. நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்

Update: 2024-08-05 09:30 GMT
Live Updates - Page 2
2024-08-05 11:44 GMT

வங்காளதேசத்தில் போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனாவை சுமந்து வரும் சி-130 விமானம் டெல்லி ஓடுபாதையில் இன்று மாலை 5.15 மணியளவில் தரையிறங்கும் என கூறப்படுகிறது.

2024-08-05 11:26 GMT

ஷேக் ஹசீனாவின் AJAX01431 என்ற ஹெலிகாப்டர் பிரயாக்ராஜ் வான்பரப்பில் (உ.பி) பறப்பதாக ரேடாரில் பதிவாகி உள்ளது. 

2024-08-05 11:21 GMT

ஷேக் ஹசீனாவின் வீட்டை சூறையாடிய போராட்டக்காரர்கள்

ஷேக் ஹசீனாவின் வீட்டுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், கையில் கிடைக்கும் பொருள்களை எல்லாம் சூறையாடிச் சென்றனர். பிரதமரின் இல்லத்தில் உள்ள படுக்கையிலும், இருக்கைகளிலும் போராட்டக்காரர்கள் படுத்து ஓய்வெடுக்கும் காணொலிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும், பிரதமரின் இல்லத்தில் இருந்த பொருள்களையும் சிலர் தூக்கிச் செல்லும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

2024-08-05 11:21 GMT

வங்காளதேசத்தில் போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ள நிலையில், இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள கிழக்கு லண்டன் மசூதி மற்றும் லண்டன் முஸ்லிம் மையத்திற்கு வெளியே மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

2024-08-05 11:14 GMT

வங்காளதேசத்தில் சமூக-அரசியல் பதற்றம் அதிகரித்திருப்பதால் அங்குள்ள எல்.ஐ.சி. அலுவலகம் இன்று மூடப்பட்டது. 7-ம் தேதி வரை எல்.ஐ.சி. அலுவலகம் மூடப்பட்டிருக்கும். ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருப்பதால, அலுவலகம் மூடப்படுவதாக எல்.ஐ.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2024-08-05 11:10 GMT

வங்காளதேசத்தில் நடந்து வரும் கலவரம் காரணமாக இந்தியாவில் உள்ள வங்காள தேச தூதரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

2024-08-05 11:07 GMT

வங்காள தேசத்தில் ஷேக் ஹசீனாவின் தந்தையும், முன்னாள் அதிபருமான முஜிபுர் ரகுமான் சிலை போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்டது.

2024-08-05 10:59 GMT

எங்கு செல்கிறார் ஷேக் ஹசீனா?

நாடு முழுவதும் வெடித்த கலவரம் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்து வெளியேறினார் ஷேக் ஹசீனா.பிற்பகல் 2.30 மணியளவில் சகோதரியுடன் ஹெலிகாப்டர் மூலம் ஷேக் ஹசீனா தப்பிய காட்சிகள் வெளியானது.

இந்தநிலையில், நாட்டை விட்டு தப்பி ஓடிய  ஷேக் ஹசீனா இந்தியாவின்  டெல்லி அல்லது இங்கிலாந்தில் லண்டனிலும் அல்லது பின்லாந்து நாட்டிலும் தஞ்சமடைய வாய்ப்பு இருப்பதாக தி டான் இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

2024-08-05 10:53 GMT

வங்காளதேசத்தில் சமீப வாரங்களாக காணப்படும் வன்முறையான சூழலை முன்னிட்டு, எல்லை பகுதிகளில் பணியாற்றி வரும் பி.எஸ்.எப். படையினர் அனைவரின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

2024-08-05 10:40 GMT

விமான ரேடரில் ஷேக் ஹசீனா

ஷேக் ஹசீனாவின் ஹெலிகாப்டர் (AJAX01431)ஜார்கண்டின் தன்பாத் வான்பரப்பில் பறந்து வருவதாக ரேடரில் தகவல் வெளியாகி உள்ளது. ஷேக் ஹசீனா டெல்லியில் தஞ்சமடையக்கூடும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்