வார ராசிபலன் 15.12.2024 முதல் 21.12.2024 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.

Update: 2024-12-15 12:43 GMT

மேஷம்

மனதால் நினைப்பதை கைகளால் விரைவாக செய்யும் திறன் பெற்ற மேஷ ராசியினர் இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்பட்டு நீண்ட காலமாக திட்டமிட்ட விஷயங்களை செயல்படுத்துவார்கள். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை செலவுகளை சமாளித்து விடுவீர்கள். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் சிக்கல்களை சந்தித்து அவற்றை தீர்ப்பது குறித்து ஆலோசனை செய்வர். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் தங்களுடைய பணிகளில் வழக்கத்தை விட கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பொறுப்பை உணர்ந்து அனைவரும் பாராட்டும் காரியங்களில் ஈடுபடுவார்கள். வெளியிடங்களில் நேரம் தவறி உண்பதால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு சீராகும். இந்த வாரம் ஒரு பத்து பேருக்காவது அன்னதானம் செய்வது பல நன்மைகளை பெற்று தரும்.

ரிஷபம்

மற்றவர்களுடைய துயரங்களை தன்னுடைய துயரமாக நினைத்து மனதில் பச்சாதாபப்படும் ரிஷப ராசி நேருக்கு இந்த வாரம் பல நன்மைகள் வீடு வந்து சேரும். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை தன வரவில் எந்தவித தடைகளும் ஏற்படாது. தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகளை பொறுத்தவரை நீண்ட காலமாக செயல்படுத்த வேண்டும் இன்று மனதில் நினைத்த திட்டங்களை செயல்படுத்தலாம். உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைப்பதன் மூலம் மன உளைச்சலை அடைவர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நண்பர்கள் விஷயத்தில் அனுசரித்து செல்ல வேண்டும். மன அழுத்தம் காரணமாக ஜீரணக் கோளாறு அல்லது பிரஷர் ஆகியவை ஏற்பட்டு குணமடையும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு உங்கள் செலவில் மருந்து மாத்திரைகள் வாங்கித் தருவது பல நன்மைகளை ஏற்படுத்தும்.

மிதுனம்

கலை உணர்வும், அழகுணர்வும், செய்யும் காரியங்களில் நேர்த்தியும், சுத்தமும் கடைபிடிக்கும் மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பார்த்த பொருளாதார வரவு உண்டு. குடும்ப நிலையைப் பொறுத்தவரை செலவுகளை எப்படியோ சமாளித்து விடுவீர்கள். தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் நல்ல மாற்றங்களை நோக்கி தங்களுடைய முயற்சிகளை அமைத்துக் கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் பலரது எதிர்ப்பை சந்திக்க வேண்டியது இருக்கும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த நல்ல சம்பவங்கள் நடக்கும். பற்களில் பாதிப்பு, வயிற்றுக் கோளாறு ஆகியவை ஏற்பட்டு தகுந்த மருத்துவ சிகிச்சையின் மூலம் விலகும். வாழ்க்கைத் துணைக்கு விருப்பமான விஷயங்களை செய்வதன் மூலம் மகிழ்ச்சி மட்டுமல்லாமல் நன்மைகளும் ஏற்படும்.

கடகம்

மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதை போன்று மற்றவர்களும் தன் மீது அன்பு செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கும் மனநிலை கொண்ட கடக ராசியினருக்கு இந்த வாரம் மனதில் ஒருவித குழப்பம் ஏற்பட்டு படிப்படியாக அகலும். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய தொழில் முயற்சிகளை மேற்கொண்டு முன்னேற்றம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்களுடைய மேல் அதிகாரிகள் ஆதரவை பெற்று உள்ளம் மகிழ்ச்சி அடைவார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி நிர்வாகத்தின் பாராட்டை பெறுவார்கள். மன குழப்பம் காரணமாக தலைவலியும், உடல் நடுக்கமும் ஏற்பட்டு குணமடையும். புற்றுக்கோவிலுக்கு பால் வாங்கி கொடுத்து பால் அபிஷேகம் அல்லது பாம்புக்கு பால் பார்ப்பது ஆகியவற்றின் மூலம் நன்மைகள் ஏற்படும்.

சிம்மம்

ஒரு சொல், ஒரு சிந்தனை, ஒருசெயல் என்று இருக்கும் சிம்ம ராசியினருக்கு இந்த வாரம் செலவுகள் அதிகரித்தாலும் எப்படியோ உருட்டி சரி செய்து விடுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு சேமிப்பு கரையும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய சிக்கல்களை சந்தித்து வெற்றிகரமாக சமாளிப்பார்கள். உத்தியோகஸ்தர்களை பொறுத்தவரை பணியிடத்தில் சுமுகமான போக்கு நிலவி வரும். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கல்வியிலும், மற்ற செயல்பாடுகளிலும் வெற்றி உண்டு. மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகளை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். வயது முதிர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஆடை அல்லது செருப்பு தானம் செய்வது பல நன்மைகளை அளிக்கும்.

கன்னி

மனதிற்குள்ளேயே பல திட்டங்களை தீட்டி அவற்றை கண்ணும் கருத்துமாக வெற்றியடைய செய்யும் வகையில் செயல்படும் கன்னி ராசியினருக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்ப நிலையை பொறுத்தவரை உறவினர்களது கருத்துக்களால் குழப்பம் உண்டாகி விலகும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகளுக்கு எதிர்பாராத பல்வேறு செலவினங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் எதிர்பார்த்து வந்த நன்மைகளை பெற்று மகிழ்வார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வியிலும் இதர எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி செயல்களிலும் சிறப்பாக செயல்படுவார்கள். உடல் நலனை பொறுத்தவரை அலைச்சல் காரணமாக உடல் சோர்வு, காய்ச்சல் ஆகியவை ஏற்பட்டு விலகும். குலதெய்வத்திற்கு வஸ்திரம் சமர்ப்பணம் செய்து அர்ச்சனை அபிஷேகங்கள் செய்வது பல நன்மைகளை அளிக்கும்.

துலாம்

மனதில் பல்வேறு குழப்பங்கள் இருந்தாலும் எண்ணிய எண்ணத்தின் படி தங்களுடைய செயல்களை அமைத்துக் கொள்ளும் திறன் பெற்ற துலாம் ராசியினருக்கு இந்த வாரம் பல தடை தாமதங்களை கடந்து மனதில் நினைத்த காரியத்தை செயல்படுத்துவீர்கள். குடும்ப உறவில் மன குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் எதிர்பார்த்த பொருளாதார வரவு தடை தாமதங்களுக்கு பிறகு வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் பணி சம்பந்தமான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வியில் தடைகளை சந்தித்தாலும் இதர திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்துவார்கள். முதியோர் மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு அபிஷேகம் செய்ய பால் வாங்கிய தருவதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

விருச்சிகம்

எந்த விஷயமும் நடந்தாலும் சரி நடக்காவிட்டாலும் சரி தங்களுடைய அன்றாட கடமைகளில் கவனமாக இருந்து அவற்றைச் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட விருச்சகம் ராசியினருக்கு இந்த வாரம் மனதில் பல்வேறு எதிர்கால திட்டங்கள் உருவாகும். குடும்ப பொருளாதாரத்தைப் பொறுத்தவரை எப்படியோ வரவுகள் வந்து செலவுகளை சமாளிப்பீர்கள். தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் சற்று சிரமப்பட்டால் தொழிலில் புதிய பாதையை உருவாக்கி வெற்றி பெறலாம். உத்தியோகஸ்தர்கள் மனதில் நம்பிக்கைகளோடு எதிர்பார்க்கும் நல்ல விஷயங்கள் கூடிய விரைவில் கையில் வந்து சேரும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இப்பொழுது இருந்தே கவனமாக படித்தால் நிச்சயம் சிறப்பிடம் பெற்று தேர்வில் வெற்றி பெறுவார்கள். உடல் நலனை பொறுத்தவரை மன உளைச்சல் காரணமாக தலைவலி மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்பட்டு விலகும். அருகிலுள்ள காளி அல்லது துர்க்கை கோவிலுக்கு அபிஷேகத்திற்காக பசும்பால் வாங்கி தருவதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

தனுசு

உற்சாகமான நேரத்தில் சுறுசுறுப்பாகவும், மனம் சோர்வாக இருக்கும் நேரத்தில் கூடுதல் சுறுசுறுப்பாகவும் செயல்படும் எண்ணம் கொண்ட தனுசு ராசியினருக்கு இந்த வாரம் சற்று காலம் தாழ்த்தி காரிய வெற்றி கிடைக்கும்.குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை பழைய கடன்கள் தீர்க்கப்பட்டு புதிய கடன்கள் வந்து சேரும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் வழக்கமான பணிகளில் மட்டும் ஈடுபட்டு வரவேண்டும். உத்தியோகஸ்தர்கள் வேறு வேலை மாற்றத்திற்கு முயற்சி செய்யலாம் என்ற எண்ணத்தை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு அதன் மூலம் பாடங்களில் நல்ல மதிப்பெண் பெறும் சூழல் உருவாகும். உடல் நலமே பொறுத்தவரை வயிற்று வலி, தலைவலி ஆகியவை ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். சிவன் கோவிலில் கருவறையில் எரியும் தூண்டா விளக்குக்கு நெய் அல்லது நல்லெண்ணெய் வாங்கி கொடுப்பது பல நன்மைகளை தரும்

மகரம்

பலருடைய ஆலோசனையை கேட்டாலும் தங்களுடைய இறுதி முடிவின்படி செயல்பட்டு எப்படியாவது காரிய வெற்றியை அடைந்து விடும் மகர ராசியினருக்கு இந்த வாரம் மனதில் உள்ள சஞ்சலங்கள் விலகி மனம் தெளிவு பெறும். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை செலவுகள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்ற வரவுகளும் உண்டு. தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய வாய்ப்புகளை பெற்று தொழில் விருத்தி செய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. உத்தியோகஸ்தர்கள் புதிய பணியிட மாற்றத்தை பெறுவதற்கான சூழல் அமைந்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மாதாந்திர தேர்வுகளாக இருந்தாலும் வழக்கத்தை விட கவனமாக இருக்க வேண்டும். உடல் நலனை பொறுத்தவரை அடிவயிற்று பகுதிகளில் வலி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம், ஆடை தானம் செய்வது பல நன்மைகளை ஏற்படுத்தும்.

கும்பம்

பல்வேறு சிக்கல் சிரமங்களுக்கு இடையில் தான் பல நல்ல காரியங்களையும் வாழ்க்கையில் செய்து முடிக்க வேண்டும் என்ற உண்மையை தெளிவாக அறிந்த கும்பம் ராசியினருக்கு இந்த வாரம் மனதில் நினைத்த பல விஷயங்களை செய்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை வருமானம் நல்லவிதமாக இருக்கும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய முதலீடுகளை செய்து லாபம் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வை பெறுவதற்குரிய காலம் கனிந்து உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடந்த காலத்தில் செய்த பல நல்ல விஷயங்களின் பலனை அடைவார்கள். உடல் நலனை பொறுத்தவரை காய்ச்சல் மற்றும் வயிற்றுக்கோளாறு ஆகியவை ஏற்பட்டு குணமடையும். அரச மரத்தடி பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சமர்ப்பணம் செய்தால் எண்ணிய காரியம் வெற்றி பெறும்.

மீனம்

தமக்கு நடக்கவுள்ள நன்மை, தீமைகளை முன்னதாகவே யூகித்து அறிந்து கொள்ளும் திறன் பெற்ற மீனம் ராசி எனக்கு இந்த வாரம் செலவுகள் அதிகமாக இருந்தாலும் குடும்ப உறவினர்களது ஆதரவோடு அவற்றை சுலபமாக சமாளித்து விடுவார்கள். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை நல்ல தன வரவு உண்டு. தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய திட்டங்களை செயல்படுத்தி லாபம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் பல்வேறு பொறுப்புகள் ஏற்படும். மற்றும் கல்லூரி மாணவர்கள் உங்களுடைய எதிர்கால படிப்பு குறித்த வழிகாட்டுதல்களை பெறுவார்கள். உடல் நலனை பொறுத்தவரை நுரையீரல் பாதிப்பு, இருமல் ஆகியவை ஏற்பட்டு நீங்கும். துப்புரவு பணியாளர்கள் மற்றும் செருப்பு தைப்பவர்களுக்கு ஆடை தானம், அன்னதானம் செய்வதன் மூலம் பல நன்மைகள் உண்டு.

 

Tags:    

மேலும் செய்திகள்