வார ராசிபலன் 17.11.2024 முதல் 23.11.2024 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

Update: 2024-11-17 00:55 GMT

இந்த வார ராசிபலன்

மேஷம்

குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகும். தொழில்துறையினர் உற்பத்திக்கான செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் வரவு-செலவில் எச்சரிக்கை செலுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பொறுப்புகளை நல்லபடி நிறைவேற்றி நற்பெயர் வாங்குவார்கள். ரியல்எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை செயல்படுத்தி ஆதாயம் அடையலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் அழகு சாதன தயாரிப்பு, எந்திர தளவாட உற்பத்தி நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். கலைத்துறையினர் தடைகளை சந்தித்தாலும் வெற்றி பெற தடை இல்லை. மீடியாவில் பணியாற்றுபவர்கள் எதிர்கால நன்மைக்காக நிகழ்கால சிரமங்களை ஏற்க வேண்டும். அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்பட்டு விலகும். மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி, முதியோர்களுக்கு அன்னதானம் செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

ரிஷபம்

எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். தொழில்துறையினர் தங்கள் முயற்சிக்கு ஏற்ற லாபத்தை பெறுவர். வியாபாரிகள் பழைய கடன்களை கவனமாக திருப்பி செலுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்கள் மறைமுக எதிர்ப்புகளை மீறி செயல்பட வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் பல தடை தாமதங்களுக்கிடையில் புதிய திட்டங்களை செயல்படுத்துவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் விவசாய விளைபொருட்கள், அரசு நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் அடையலாம். கலைத்துறையினரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மீடியாவில் பணிபுரிபவர்கள் தன வரவையும் அங்கீகாரத்தையும் பெறுவர். நேரம் தவறி உண்பதால் வயிற்று பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். முதியோர்களுக்கு ஆடை தானம், நோயுற்றவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதன் மூலம் நன்மைகள் கிடைக்கும்.

மிதுனம்

எதிர்பார்த்த பண வரவு தாமதமாக வந்து சேரும். தொழில்துறையினர் திடீர் ஆர்டர் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி அடைவர். வியாபாரிகள் தொழில் விரிவாக்க முயற்சிகளை செய்யலாம். உத்தியோகஸ்தர்கள் பணி சார்ந்த மேலதிக பயிற்சிகளை பெறுவர். ரியல் எஸ்டேட் துறையினர் கடன் விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு, எந்திர உற்பத்தி நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். கலைத்துறையினர் நீண்ட காலமாக எதிர்பார்த்த விஷயங்கள் கிடைக்கப்பெறுவர். மீடியாவில் பணியாற்றுபவர்கள் அமைதியாக செயல்பட்டு திறமையை வெளிப்படுத்த வேண்டும். திட்டமிட்ட பணிகள் தாமதமாவதால் மன அழுத்தம் ஏற்பட்டு விலகும். திருக்கோவில் உழவாரப்பணி, ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்வதன் மூலம் நன்மைகள் பெருகும்.

கடகம்

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில்துறையினர் புதிய இடமாற்றம், வண்டி வாகன சேர்க்கை ஆகியவை கிடைக்கப் பெறுவர். வியாபாரிகள் புதிய வர்த்தக பங்குதாரர் மூலம் ஆதாயம் பெறுவர். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் பொறியியல், உணவுப்பொருள் உற்பத்தி நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். கலைத்துறையினர் நூதன முயற்சிகள், புதிய நபர்கள் தொடர்பு மூலம் நன்மை அடைவர். பணியிட மாற்றத்தை விரும்பிய மீடியா துறையினர் பெறுவார்கள். மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் மருத்துவ ஆலோசனையை கவனமாக பின்பற்ற வேண்டும். உடன்பிறந்த சகோதர-சகோதரிகளுக்கு பண உதவி செய்வது, அருகிலுள்ள திருக்கோவிலுக்கு பூஜை பொருள்கள் வாங்கித் தருவதன் மூலம் நன்மை ஏற்படும்.

சிம்மம்

குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில்துறையினர் எதிர்பாராத செலவுகளை சந்திப்பர். வியாபாரிகள் கடன் கொடுத்தல், வாங்குதல் ஆகிய விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியிடத்தில் கவனமாக செயல்படாவிட்டால் நிர்வாக நடவடிக்கைக்கு உட்பட வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் புதியவர்களை நம்பி திட்டங்களை செயல்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எந்திர உற்பத்தி, ரியல் எஸ்டேட் துறை பங்குகளில் கவனமாக இருக்க வேண்டும். கலைத்துறையினர் முயற்சிகளுக்கு ஏற்ற காரிய வெற்றி பெறுவர். மீடியாவில் பணியாற்றுபவர்கள் சூழ்நிலையை அனுசரித்து நிதானமாக செயல்பட வேண்டும். நுரையீரல், இதய பாதிப்பு ஏற்பட்டு தக்க சிகிச்சையால் குணமாகும். ரத்ததானம், ஆதரவற்றோருக்கு அன்னதானம், தண்ணீர் தானம் செய்தால் நன்மை ஏற்படும்.

கன்னி

பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியம் ஏற்படும். தொழில் துறையினர் காலதாமதம் ஆனாலும் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவர். வியாபாரிகள் பழைய கடன்களை தீர்த்து, புதிய கடன் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை சந்திப்பர். ரியல் எஸ்டேட் துறையினர் அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயத்தை அடைவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் தகவல் தொழில்நுட்பம், வாகன தயாரிப்பு நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் அடைவர். கலைத்துறையில் இருப்பவர்கள் புதிய நபர்களை முற்றிலும் நம்பி விடக்கூடாது. மீடியாவில் பணிபுரிபவர்கள் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். வயிறு, முதுகு ஆகிய பகுதிகளில் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் நீங்கும். உடன் பிறந்தவர்களிடம் கோபத்தை காட்டாமலிருப்பது, விரதம் இருந்து இஷ்ட தெய்வம், குலதெய்வத்தை வழிபடுவது ஆகியவற்றின் மூலம் நன்மைகள் ஏற்படும்.

துலாம்

சொந்தபந்தங்களிடையே ஏற்படும் வாக்குவாதங்களை கவனமாக கையாள வேண்டும். தொழில் துறையினர் தடை தாமதங்களுக்கு பிறகு லாபம் அடைவர். வியாபாரிகள் பணம் கொடுக்கல்-வாங்கல் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் மன உளைச்சலை அடைவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் பணம் பரிவர்த்தனை செய்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் இரும்பு, எந்திர தயாரிப்பு நிறுவனங்கள் பங்குகள் மூலம் லாபம் பெறலாம். கலைத்துறையினர் உழைப்புக்கு ஏற்ற ஆதாயம் பெறுவர். மீடியாவில் பணிபுரிபவர்கள் வழக்கமான பணிகளில் கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். வயது முதிர்ந்தோர், துப்புரவு தொழிலாளிகளுக்கு பொருள் உதவி செய்தால் நன்மைகள் ஏற்படும்.

விருச்சிகம்

தடைகளை கடந்து காரிய வெற்றி பெறுவீர்கள். உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டும். தொழில்துறையினர் தொழில் விரிவாக்க விவகாரங்களில் கவனமாக செயல்பட வேண்டும். வியாபாரிகள் அரசு சம்பந்தமான காரியங்களில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியிட அங்கீகாரம் பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் திட்டமிட்ட லாபத்தைப் பெறுவர். ஷேர் மார்க்கெட் துறையினர் ரியல் எஸ்டேட், வாகன தயாரிப்பு நிறுவன பங்குகளில் ஆதாயம் அடைவர். கலைத்துறையினர் புதிய களங்களில் திறமையை வெளிக்காட்ட வேண்டும். மீடியாவில் பணிபுரிபவர்கள் பல சிக்கல்களை சமாளிக்க வேண்டும். மருத்துவ சிகிச்சை மேற்கொள்பவர்கள் மருத்து ஆலோசனைகளை கவனமாக பின்பற்ற வேண்டும். ரத்ததானம் அளிப்பது, அனாதை ஆசிரமங்களில் உள்ளவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் நன்மை ஏற்படும்.

தனுசு

நீண்ட காலமாக எதிர்பார்த்த விஷயங்கள் கைகூடிவரும். தொழில்துறையினர் புதிய திட்டங்களை செயல்படுத்தலாம். வியாபாரிகள் பல இடங்களுக்கு பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டும். உத்யோகஸ்தர்கள் மறைமுக எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் சிரமங்களை சந்தித்து ஆதாயம் அடைவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் ரசாயனம், பொறியியல் நிறுவன பங்குகளை வாங்குவதில் கவனமாக இருக்கவேண்டும். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளை பெற்று திறமையை வெளிப்படுத்துவர். மீடியாவில் பணிபுரிபவர்கள் நல்ல சந்தர்ப்பங்களை பெறுவார்கள். பல இடங்களுக்கும் சென்று வருவதால் உடல் சோர்வு, சளி தொல்லை ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு மருத்துவ உதவி செய்வது, ஆதரவற்ற முதியோருக்கு காலணி வாங்கித் தருவதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

மகரம்

திட்டமிட்ட காலத்திற்குள் எதையும் செய்து முடிக்க வேண்டும். தொழில்துறையினர் உற்பத்தி சரியாக நடப்பதை கவனிக்க வேண்டும். வியாபாரிகள் தொழில் விரிவாக்க பணிகளை தள்ளி வைக்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கூடும். ரியல் எஸ்டேட் துறையினர் தற்போது நடந்து வரும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் கல்வி மற்றும் நிதி நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். கலைத்துறையினர் பல நாட்களாக எதிர்பார்த்த வாய்ப்பை பெறுவார்கள். மீடியாவில் பணிபுரிபவர்கள் திறமையாக செயல்பட்டு நிர்வாக ரீதியான பாராட்டு பெறுவர். தொண்டை பாதிப்பு, செரிமான கோளாறு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் குணமாகும். கோவில் விசேஷங்களில் பங்கேற்று தெய்வ கைங்கரியத்தில் ஈடுபடுவதாலும், அன்னதானம் செய்வதாலும் நன்மைகள் ஏற்படும்.

கும்பம்

அலைச்சலுக்கேற்ற ஆதாயம் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிசியாக இருப்பீர்கள். தொழில்துறையினர் பண விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் தாங்களாகவே எல்லா விஷயங்களையும் நேரடியாக கவனிக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றம் பெற தாமதம் ஏற்படும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை தொடங்குவதை தள்ளி வைக்கவும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் ஆபரண தயாரிப்பு, அழகு சாதன பொருள் நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். கலைத்துறையினர் இரவு-பகல் பாராமல் செயல்பட்டால் நல்ல பெயர் கிடைக்கும். மீடியாவில் பணிபுரிபவர்கள் புதிய வாய்ப்புகளை பெற்று திறமையை வெளிப்படுத்தலாம். அலைச்சல், கூடுதல் செலவுகள் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். ஆதரவற்றோர், அனாதை ஆசிரமங்களுக்கு பொருள் உதவி செய்வதால் நன்மை ஏற்படும்.

மீனம்

அலைச்சல்களுக்குப் பிறகு காரிய வெற்றி கிடைக்கும். தொழில் துறையினர் அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் நிர்வாக விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பொறுப்பை ஏற்க வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் நடைபெறும் கட்டுமான திட்டங்களில் எச்சரிக்கை செலுத்த வேண்டும். ஷேர்மார்க்கெட் பிரிவினர் எந்திரங்கள், ஆடை தயாரிப்பு நிறுவன பங்குகளில் லாபம் அடைவர். கலைத்துறையினர் புதியவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் கவனமாக இருக்க வேண்டும். மீடியா துறையினர் கடமையில் கவனமாக இருக்க வேண்டும். கால்களில் வலி ஏற்பட்டு சிகிச்சையால் குணமடையும். குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடனை செலுத்துவதாலும், பால் அபிஷேகம் செய்வதாலும் நன்மைகள் ஏற்படும்.

Tags:    

மேலும் செய்திகள்