வார ராசிபலன் 01.12.2024 முதல் 07.12.2024 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்;

Update: 2024-12-01 03:07 GMT

இந்த வார ராசிபலன்: 2024 டிசம்பர் 1 முதல் 7 தேதி வரை (கார்த்திகை 16 முதல் 22 தேதி வரை)

மேஷம்

துணிச்சலாக செயல்பட்டு வெற்றி பெறும் மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி கிடைக்கும். குடும்ப வருமானம் பெருகும். தான தர்மங்களை செய்வீர்கள். தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் பல நாட்களாக எதிர்பார்த்து வந்த முன்னேற்றங்கள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் தங்களுக்கு அளித்த பணிகளை மட்டும் கவனமாக செய்து வர வேண்டியது அவசியம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு மகிழ்ச்சியாக பொழுதுபோக்கும் அதே சமயம் பாடங்களிலும் அதே அளவு கவனம் செலுத்த வேண்டும். வண்டி வாகனங்களில் நிதானமாக செல்வது அவசியம். இயன்றவரை வெளியிடங்களில் சுகாதாரமற்ற நிலையில் பானங்களை பருக வேண்டாம். கோவிலில் உள்ள பசு மாட்டுக்கு அகத்திக்கீரை, பழங்கள் அளிப்பதன் மூலம் நன்மைகள் பெருகும்.

ரிஷபம்

எந்த விஷயமும் நடப்பதற்கு முன்பே அது பற்றி யூகித்து அறியும் திறன் பெற்ற ரிஷபம் ராசியினருக்கு இந்த வாரம் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்ப நிலையில் வாழ்க்கை துணையிடம் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் கடந்த கால அனுபவங்களில் இருந்து கற்ற பாடத்தை பயன்படுத்தி சிக்கல்களை தீர்ப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்களுடைய அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பை பெறுவார்கள். பள்ளி கல்லூரி மாணவர்கள் வழக்கத்தைவிட கூடுதல் கவனத்தோடு பாடங்களை கற்க வேண்டும். உடல் நலனைப் பொறுத்தவரை அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டு விலகும். சுகாதார பணியாளர்களுக்கு அன்னதானம், பொருள் உதவி செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

மிதுனம்

நண்பர்களோடு அளவளாவிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடையும் மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் பல தடை தாமதங்களுக்கிடையில் எதிர்பார்த்த பொருளாதார வரவு வந்து சேரும். குடும்ப நிலையை பொறுத்தவரை சுப காரிய செலவுகள் ஏற்படும். தொழில்துறையினர், வியாபாரிகள் தொழில் விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகளை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் மருத்துவ செலவுகளை அலுவலக கடன் பெற்று சமாளிப்பார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கள் நண்பர்களுடைய வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு உற்சாகமாக இருப்பார்கள். உடல் நலத்தை பொறுத்தவரை மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இயன்றவர்கள் ரத்த தானம் செய்வது அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் வாங்க உதவி செய்வது ஆகியவை மூலம் நன்மைகள் ஏற்படும்.

கடகம்

பல்வேறு திறமைகள் இருந்தாலும் பல தடை தாமதங்களை சந்தித்த பின்பே வெற்றி பெறும் கடக ராசியினர் இவ்வாரம் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரபரப்பாக செயல்படுவார்கள். குடும்ப பொருளாதாரம் நிலையை பொறுத்தவரை வரவுக்கு ஏற்ற செலவு ஏற்படும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் தொழில் விருத்திக்காக வெளியூர் பிரயாணங்களை மேற்கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணி உயர்வை பெறுவார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களுடைய எதிர்காலம் குறித்து கவனமாக திட்டமிட வேண்டிய காலகட்டம் இது. உடல் நலனை பொறுத்தவரை வயதானவர்கள் மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்து மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள், ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகளுக்கு பொருள் உதவி செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

சிம்மம்

பிடித்த பிடியை விடாமல் கடைசிவரை நின்று போராடும் குணம் கொண்ட சிம்மம் ராசியினர் இந்த வாரம் பல தடை தாமதங்களை சந்தித்து வெற்றி பெறுவார்கள். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை பழைய கடன்களை அடைத்து புதிய கடன்களை பெறும் சூழல் ஏற்படும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகளுக்கு இது லாபகரமான காலகட்டம். உத்தியோகஸ்தர்கள் தங்களுடைய பணியிடங்களில் பணி சம்பந்தமான விஷயங்களை மட்டும் கவனிப்பது நல்லது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மனதில் வெளிநாட்டு கல்வி மற்றும் பணிவாய்ப்பு குறித்த லட்சியங்கள் உருவாகும். ஜலதோஷம், இருமல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் அகலும். ஆதரவற்ற வயதான பெண்மணிகளுக்கு ஆடை தானம் செய்வதன் மூலம் நன்மைகள் வந்து சேரும்.

கன்னி

யாரிடம் எப்படி அணுகினால் காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என்ற நுட்பம் அறிந்த கன்னி ராசியினருக்கு குரு அருளும், இறையருளும் பெற்றுத் தரும் காலகட்டம் இது. குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை நல்ல வரவும், ஆடை ஆபரண சேர்க்கையும் உண்டு. தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் திட்டமிட்டு துணிச்சலாக செயல்படுவதன் மூலம் வெற்றி பெறலாம். உத்தியோகஸ்தர்கள் தங்களுடைய மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தேர்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். உடல் நலனை பொறுத்தவரை அடி வயிற்று பகுதியில் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் அகலும். தாய் தந்தையர்கள் மற்றும் பெரியோர்களது ஆசிகளை பெறுவதன் மூலம் பல நன்மைகள் வந்து சேரும்.

துலாம்

மற்றவர்களைப் பற்றி சரியாக மனதில் எடைபோடும் திறமை பெற்ற துலாம் ராசியினருக்கு இந்த வாரம் திருக்கோவில் தரிசனங்கள் மற்றும் புனித நீராடும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை செலவுகளை திட்டமிட்டு சமாளிக்க வேண்டும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய ஊர்களில் தங்கள் கிளைகளை தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களது உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரத்தை பெறுவார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் புதுமையாக சிந்தித்து சிறப்பாக செயல்படுவார்கள். உடல் நலனை பொறுத்தவரை காய்ச்சல் மற்றும் கை கால் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் குணமடையும். குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வம் ஆகியவற்றுக்கு மலர்கிரீடம் சமர்ப்பணம் செய்தால் பல நன்மைகள் ஏற்படும்.

விருச்சிகம்

மனதில் உள்ள வைராக்கியம் வெளியில் தெரியாத வகையில் மறைத்துக் கொண்டு கடுமையாக உழைக்கத் தெரிந்த விருச்சிக ராசியினர் இந்த வாரம் புதுமையான முயற்சிகளை கையாண்டு வெற்றி பெறுவார்கள். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை பழைய கடன்களை திருப்பி செலுத்தி விடுவீர்கள். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் நீண்ட நாட்களாக திட்டமிட்ட விஷயங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை சந்திப்பார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு புதிய இடங்களுக்கு செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். உடல் நலத்தை பொறுத்தவரை அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். பெண் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் எழுது பொருள் வாங்கி கொடுப்பதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.

தனுசு

உறுதியான தீர்மானத்தை மேற்கொண்டு காரிய வெற்றிக்காக அயராது உழைக்கும் தனுசு ராசியினருக்கு இந்த வாரம் தெய்வ அனுகிரகத்தை பெறும் காலகட்டமாக இருக்கும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை செலவுகளை எப்படியோ சமாளித்து குடும்பத்தை நகர்த்துவீர்கள். தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் பொருட்கள் கொள்முதல் செய்வதில் வழக்கத்தை விட குறைவாக செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மனதிற்கு இனிய பணிச்சூழலில் பணியாற்றுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிகளை பெறுவது வெற்றிக்கு வழிவகுக்கும். உடல் நலத்தை பொறுத்தவரை அடிக்கடி பயணம் மேற்கொள்வதால் அசதி ஏற்பட்டு விலகும். கோவில் குளங்களில் உள்ள மீன்களுக்கு பொரியை தீனியாக போடுவதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

மகரம்

ஆயிரம் ஆலோசனைகள் கேட்டாலும் தங்கள் மனப்போக்கின்படி நடக்கும் தன்மை கொண்ட மகர ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பார்த்த பொருளாதாரம் கைகளுக்கு வந்து சேரும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை பல தடைகள் இருந்தாலும் எப்படியோ சமாளித்து விடுவீர்கள். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் கடந்த காலங்களில் சந்தித்து வந்த சிக்கல்கள் விலகி நல்ல லாபம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் வேறு நல்ல பணி வாய்ப்புகள் குறித்த தகவல்களை பெறுவார்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேடிக்கை விளையாட்டுகளில் இருந்து விலகி பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். உடல் நலனை பொறுத்தவரை ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் ஆகியவை ஏற்பட்டு விலகும். ஆதரவற்ற முதியோர்களுக்கு காலணி தானம் செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

கும்பம்

தங்கள் கஷ்ட நஷ்டங்களை தங்களுடன் வைத்துக் கொள்ளும் மனப்பான்மை கொண்ட கும்ப ராசியினர் இந்த வாரம் புதிய சூழல்களை புதிய நம்பிக்கைகளை சந்திப்பார்கள். ரொம்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை பழைய கடன்களை தீர்த்து புதிய கடன்களை பெறும் சூழல் ஏற்படும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் வர்த்தக மேம்பாட்டுடன் சமூக மதிப்பையும் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். கல்லூரி மாணவர்கள் தங்களுடைய தனி திறமைகளை வெளிக்காட்டி பாராட்டு பெறுவார்கள். உடல் நலனை பொறுத்தவரை மன உளைச்சல் மற்றும் உழைப்பு காரணமாக அசதி ஏற்படும். கோவில்களில் நடைபெறும் கோ பூஜையில் கலந்து கொண்டு பூஜை பொருட்களை வாங்கி கொடுப்பதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

மீனம்

வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டாலும் அவற்றை மறந்து விட்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் இயல்பு கொண்ட மீன ராசியினருக்கு இந்த வாரம் மனதில் புதிய நம்பிக்கைகள் உருவாகும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை கையில் இருக்கும் சேமிப்புகள் கரையும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் தடை தாமதங்களை சந்தித்து தங்களுடைய அனுபவங்களை பயன்படுத்தி அதில் இருந்து விடுபட வேண்டும். உத்தியோகஸ்தர்கள் தங்களுடைய மேலதிகாரிகளின் ஆதரவை பெற்று செயல்படுவார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். உடல் நலனை பொறுத்தவரை கை கால்களில் வலி உடல் அசதி ஆகியவை ஏற்பட்டு சரியாகும். குலதெய்வத்துக்கு பால் அபிஷேகம் செய்வதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.



Tags:    

மேலும் செய்திகள்