வார ராசிபலன் 29.12.2024 முதல் 04.01.2025 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.

Update: 2024-12-29 00:38 GMT

இந்தவார ராசிபலன்:

மேஷம்

பயம் என்பதை அறியாத, துணிச்சலோடு செயல்பட்டு காரிய வெற்றி பெறும் மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் தொடங்கிய காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை எதிர்பார்த்த வரவுகள் தாமதம் ஆனாலும் எப்படியாவது வந்து சேர்ந்துவிடும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத நல்ல மாற்றங்களை பணியிடங்களில் சந்திப்பார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்காலம் குறித்த நல்ல வழிகாட்டுதல்களைப் பெறுவர். உடல் நலனை பொறுத்தவரை வெளியிடங்களில் உண்ணும் உணவு, பருகும் நீர் காரணமாக தொண்டை மற்றும் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு அகலும். சிவன் கோவிலில் உள்ள அடியார்களுக்கு அன்னதானம் செய்வது நல்ல பலன்களை ஏற்படுத்தித் தரும்.

ரிஷபம்

பழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல் தங்களுடைய இயல்பின்படி நடந்து காரிய வெற்றி அடையும் ரிஷபம் ராசியினர் இந்த வாரம் மற்றவர்களுடன் பேசுவதில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்த வரை கடந்த கால சிக்கல்கள் படிப்படியாக விலகும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய முதலீடு செய்து தொழில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் தொடர்பு மூலம் நன்மைகளை பெறுவார்கள். விளையாட்டுகளில் திறமை பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களுக்கு புகழ் சேர்ப்பர். காலம் தவறிய உணவு, பாஸ்ட் புட் வகைகளை உண்பது ஆகியவற்றால் வயிற்று கோளாறு ஏற்பட்டு அகலும். கருப்பு நிற ஆடைகளை அணியாமல் மஞ்சள் மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து முக்கியமான காரியங்களுக்கு செல்வது வெற்றி தரும்.

மிதுனம்

சக மனிதர்களது நட்பை விரும்பி இனிமையாக மற்றவர்களோடு உரையாடும் பண்பு கொண்ட மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் காரிய வெற்றி ஏற்படும் காலகட்டமாகும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை புதிய கடன் வாங்காமல் சமாளித்து விடுவீர்கள். தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் நீண்ட நாட்களாக மனதில் வைத்திருந்த திட்டங்களை நிறைவேற்றுவார்கள். உத்தியோகஸ்தர்கள் திறமைக்கேற்ற பாராட்டுகளை நிர்வாகத்தினர் மூலம் பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும். உடல் நலனை பொறுத்தவரை காய்ச்சலுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை, ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அருகிலுள்ள திருக்கோவில்களுக்கு பிரசாதத்திற்கு உரிய பொருட்களை வாங்கித் தருவது பல நன்மைகளை அளிக்கும்.

கடகம்

தாய்மை பண்பும், தன்னை நம்பியவர்களை எப்பாடுபட்டாவது காக்கும் தியாக உணர்வு கொண்ட கடகம் ராசியினருக்கு மனதில் புதிய தெளிவு பிறந்து பல குழப்பங்கள் அகலும். இல்லத்தரசிகள் பழைய கடன்களை திருப்பி செலுத்துவதில் முனைப்பாக இருப்பார்கள். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் பல நல்ல மாற்றங்களை எதிர்கொண்டு முன்னேற்றப் பாதையில் நடையிடுவர். உத்தியோகஸ்தர்கள் இதுவரை சந்தித்த தடை தாமதங்கள் விலகி பதவி உயர்வு பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களுடைய பொறுப்புகளை உணரும் காலகட்டம் இது. உடல் நலனை பொறுத்தவரை ஜலதோஷம், இருமல் ஏற்பட்டு தக்க மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அகலும். ராகு காலங்களில் புற்று கோவில்களில் வழிபாடு செய்வது நல்ல விஷயங்களை கொண்டு வந்து சேர்க்கும்.

சிம்மம்

எந்த ஒரு காரியத்தையும் அதனுடைய அவசியம் மற்றும் காலதேச நிலை ஆகியவற்றை அறிந்த பின்பு அந்த பணியை செய்யும் திறன் பெற்ற சிம்ம ராசியினருக்கு இந்த வாரம் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் நிறைவேறும் காலகட்டம். குடும்ப நிலையை பொறுத்தவரை அனைவரையும் அனுசரித்து சிக்கல்களை சமாளிப்பீர்கள். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் பல தடை தாமதங்களை சந்தித்து எதிர்பார்த்த லாபம் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பொறுமையாக இருந்ததற்கான பலனை அடைவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிகளில் சாதனை புரிவர். உடல் நலனை பொறுத்தவரை ஜலதோஷம் மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்பட்டு விலகும். துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் அனாதை ஆசிரமங்களுக்கு தண்ணீர் பாட்டில் தானம் செய்வது நன்மைகளை ஏற்படுத்தும்.

கன்னி

மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் சூழ்நிலையை இனிமையாக மாற்றிக் கொள்ளும் கன்னி ராசியினருக்கு இந்த வாரம் பல்வேறு தடை தாமதங்களுக்கிடையில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பொருளாதார நிலையை பொறுத்தவரை செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் எதிர்பாராத செலவுகளை சந்தித்து சுமுகமாக சரி செய்வார்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் மற்றவர்களை நம்பி இல்லாமல் தாங்களே களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாடங்களில் கவனம் செலுத்தி கற்க வேண்டிய காலகட்டம். உடல் நலனை பொறுத்தவரை நேரம் தவறி உண்பதால் வயிற்று கோளாறுகள் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். பாடம் சொல்லிக் கொடுத்த பள்ளி ஆசிரியர்களை வணங்கி அவர்களுடைய ஆசிகளை பெறுவது பல நன்மைகளை ஏற்படுத்தும்.

துலாம்

காரிய வெற்றிக்காக நுட்பமான தந்திரங்களை கையாண்டு திறம்பட செயல்பட்டு ஜெயித்துக் காட்டும் துலாம் ராசியினருக்கு இந்த வாரம் விடாமுயற்சியோடு செயல்பட்டு வெற்றி பெறவேண்டிய காலகட்டம். குடும்ப நிலையை பொறுத்தவரை உறவுகளை அனுசரித்து செல்வதோடு, செலவுகளையும் கட்டுக்குள் வைக்க வேண்டும். தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் திட்டமிட்ட லாபத்தை பெற இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். உத்தியோகதர்கள் மேலதிகாரிகள் ஆதரவால் பதவி உயர்வு பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாடங்களில் வழக்கத்தை விட கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். உடல் நலனை பொறுத்தவரை மன உளைச்சல், உடல் அசதி ஏற்பட்டு விலகும். வீடுகளில் மாலை நேரங்களில் குங்கிலியம் தூபம் இடுவதும், கோவில்களுக்கு மணம் மிகுந்த சாம்பிராணி வாங்கித் தருவதன் மூலமும் நன்மைகள் ஏற்படும்.

விருச்சிகம்

எளிமையான குண நலன்களை பெற்றிருந்தாலும் மற்றவர்களால் புரிந்து கொள்ளப்படாமல் தவிக்கும் மனநிலை கொண்ட விருச்சிக ராசியினருக்கு இந்த வாரம் உறவினர்களாலும், நண்பர்களாலும் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். குடும்ப நிலையை பொறுத்தவரை எதிர்பாராத செலவு ஏற்பட்டாலும் எப்படியோ சமாளித்து விடுவீர்கள். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் நீண்ட நாட்களாக திட்டமிட்ட தொழில் விரிவாக்க பணிகளை மேற்கொள்வர். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு நிர்வாகத்தின் பாராட்டு பெறுவார்கள். பள்ளி, பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களுடைய எதிர்கால லட்சியத்தை உருவாக்கிக் கொள்வதற்கான வழிகாட்டுதல் கிடைக்க பெறுவார்கள். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்றவர்களுக்கு மருத்துவ உதவி அல்லது பொருள் உதவி செய்வது பல நன்மைகளை தரும்.

தனுசு

தங்கள் குற்றம் குறைகளை திருத்திக் கொண்டு சிறப்பாக தங்களை வளர்த்து வெற்றி பெறுவதில் ஆர்வம் கொண்ட தனுசு ராசியினர் இந்த வாரம் வாழ்க்கைத் துணையுடன் வாத விவாதங்களை தவிர்க்க வேண்டும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ற வரவும் உண்டு. பல தடை தாமதங்களை சந்தித்து வந்த தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் முன்னேற்றம் அடைவர். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு பெற்று உற்சாகம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு உற்சாகமாக பயணம் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். உடல் நலனை பொறுத்தவரை காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் குணமாகும். பள்ளிக் குழந்தைகளுக்கு எழுதுபொருள்கள் மட்டும் நோட்டு புத்தகங்கள் வாங்கி தருவதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.

மகரம்

தமக்கான காலம் வரும் வரை அமைதியாக காத்திருந்து வெற்றியை நோக்கி துல்லியமாக செயல்படும் மகர ராசியினர் இந்த வாரம் திட்டமிட்ட காரியங்களை நடத்தி முடிப்பார்கள். செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ற வரவும் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் தடை தாமதங்களை சந்தித்தாலும் அவற்றை வெற்றிகரமாக கடந்து செல்வார்கள். அதிகாரம் மிக்க பதவிகளில் உள்ள உத்தியோகஸ்தர்கள் சங்கடங்களை சந்தித்து வெற்றி கொள்வார்கள். மாணவர்களுக்கு வார விடுமுறை உற்சாகமாக இருக்கும். அவர்கள் மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை எச்சரிக்கையாக தவிர்க்க வேண்டும். உடல் நிலையை பொறுத்தவரை காய்ச்சல், உடல் அசதி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் குணமாகும். அனாதை இல்லங்களில் உள்ள பெண்களுக்கு இயன்ற அளவில் ஆடை தானம் மற்றும் அன்னதானம் செய்வது நன்மைகளை அளிக்கும்.

கும்பம்

எந்த ஒரு விஷயத்திலும் லாபம் கருதி அதனை செய்யும் இயல்பும், தன் சுமைகளை தானே சுமக்கும் தன்மை கொண்ட கும்பம் ராசியினர் இந்த வாரம் நண்பர்களால் நன்மை அடைவார்கள். குடும்ப நிலையை பொறுத்தவரை சிக்கல்களை சுலபமாக சரி செய்து விடுவீர்கள். தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் தங்களுடைய தொழில் விரிவாக்க முயற்சிகளை சிறிது காலம் ஒத்தி வைக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பணிகளில் வழக்கத்தை விட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பழைய மனஸ்தாபங்களை மனதில் கொள்ளாமல் நண்பர்களை அனுசரித்து செல்ல வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது சுகாதாரமான சூழலில் மட்டுமே தண்ணீர், பானங்களை பருகுவது அவசியம். ஒவ்வொரு நாளும் அருகில் உள்ள திருக்கோவிலில் நெய் தீபம் ஏற்றி வருவது அல்லது அங்குள்ள கருவறையில் உள்ள தீபத்தில் நெய் சேர்த்து வருவது நன்மைகளை ஏற்படுத்தும்.

மீனம்

தன்னையும் தனது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டு பிறருடன் இணைந்து செயல்பட்டு வெற்றி காண விரும்பும் மீனம் ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பாராத நன்மைகள் வீட்டு கதவை வந்து தட்டும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை பழைய கடன்களை திருப்பி செலுத்தும் காலகட்டம் இது. தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் எதிர்பாராத தடை தாமதங்களை சந்தித்து அதை வெற்றிகரமாக கடந்து செல்வர். உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்காலம் முன்னேற்றத்திற்கான புதிய தொழில்நுட்பங்களை கற்பர். உடல் நலனை பொறுத்தவரை காய்ச்சல், கை-கால் வலி ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆடை தானம் மற்றும் அன்னதானம் செய்வதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.

Tags:    

மேலும் செய்திகள்