வார ராசிபலன் 22.12.2024 முதல் 28.12.2024 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.

Update: 2024-12-23 01:10 GMT

இந்தவார ராசிபலன்:

மேஷம்

கருணை மிகுந்த உள்ளமும்,மனதில் உள்ளதை வெளியில் காட்டாத சுபாவமும் கொண்ட மேஷம் ராசியினருக்கு இந்தவாரம் மனதிற்கு இனிய சம்பவங்கள் நிகழும். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை பழைய கடன்களை அடைந்து புதிய கடன்பெறும் சூழல் ஏற்படும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகளுக்கு லாபகரமான காலகட்டம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியிடங்களில் பணி சம்பந்தமான விஷயங்களை மட்டும் கவனிப்பது நல்லது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி மற்றும் பணி வாய்ப்புகுறித்த எண்ணங்கள் உருவாகும். ஜலதோஷம், இருமல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் அகலும். முதியோர் இல்லங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை இயன்ற அளவுவாங்கித்தருவதால் நன்மைகள் ஏற்படும்.

ரிஷபம்

சுயமரியாதையும், லட்சியமும் கொண்டு கடினமாக உழைத்து வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ரிஷபம் ராசியினருக்கு இந்தவாரம் எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை தனவரவும், ஆடை ஆபரண சேர்க்கையும் உண்டு. தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றிபெறலாம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகள் மற்றும் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிபெறுவர். உடல் நலனை பொறுத்தவரை அடி வயிற்று பகுதியில் வலி ஏற்பட்டு மருத்துவசிகிச்சை மூலம் அகலும். உடல் உழைப்பு தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு அன்னதானம், பொருள்தானம் செய்தால் நன்மை ஏற்படும்.

மிதுனம்

வேடிக்கையான மனநிலையும், தன்னிச்சையான செயல்பாடுகளும் கொண்ட மிதுனம் ராசியினர் இந்தவாரம் சுறுசுறுப்பாக செயல்பட்டு காரிய வெற்றி அடைவர். குடும்ப பொருளாதாரநிலையில் செலவுகளை திட்டமிட்டு சமாளிக்க வேண்டும். தொழில்துறையினர், வியாபாரிகள் புது இடங்களில் கிளைகளை தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பெறுவார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் புதுமையா கசிந்தித்து, திறமையாக செயல்படுவர். உடல்நலனை பொறுத்தவரை காய்ச்சல், கை, கால்வலி ஏற்பட்டு தக்க சிகிச்சை மூலம் குணமடையும். மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கு மருந்து வாங்க உதவி செய்வது நன்மைதரும்.

கடகம்

அன்பு கொண்ட இதயமும், மற்றவர்களுடைய வெற்றியில் மனம் மகிழும் வெகுளியான இதயமும் கொண்ட கடகம் ராசியினருக்கு இந்தவாரம் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும்.குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை பழைய கடன்களை திருப்பி செலுத்தி விடுவீர்கள். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் நீண்ட நாட்களாக திட்டமிட்ட விஷயங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பர். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை எதிர்கொள்வர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு புதிய இடங்களுக்கு செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடிவயிற்றில் அல்லது மார்பில் வலி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். வீட்டு அருகிலுள்ள கோவில் உள்ள சாமிக்கு பால் அபிஷேகம் செய்து மலர் மாலை சூட்டிவணங்கினால் நினைத்தது நடக்கும்.

சிம்மம்

அன்பிலும், நட்பிலும் கூட வெகுசீரியஸ் ஆக இருந்து மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும் சிம்ம ராசியினருக்கு இந்தவாரம் இனிய காரியங்கள் எண்ணியபடி நடந்தேறும். குடும்ப வருமானம் பெருகும். தானதர்மங்களை செய்வர். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் நீண்டநாளாக எதிர்பார்த்த முன்னேற்றம் வந்துசேரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை மட்டும் கவனமாக செய்து வரவேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருக்கும் அளவுக்கு பாடங்களில் அதேகவனம் செலுத்த வேண்டும். வண்டி வாகனங்களில் நிதானமாக செல்வது அவசியம்.இயன்றவரை வெளியிடங்களில் சுகாதாரமற்றநிலையில் பானங்களை பருக வேண்டாம். கன்றுடன் கூடிய பசுமாட்டுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் உண்பதற்கு கொடுப்பதன் மூலம் நன்மைகள் வந்து சேரும்.

கன்னி

கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாத திட மனமும், புத்தி சாலித்தனமும் கொண்ட கன்னி ராசியினருக்கு இந்தவாரம் தனவரவு அதிகரிக்கும். குடும்பநிலையில் வாழ்க்கை துணையிடம் சிலகருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் கடந்த கால அனுபவங்களில் இருந்து பெற்ற அனுபவம் மூலம் சிக்கல்களை தீர்ப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப்பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பை பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூடுதல் கவனத் தோடுபாடங்களை படிக்க வேண்டும். அலைச்சல் காரணமாக உடல்சோர்வு ஏற்பட்டு விலகும். பாடம்சொல்லி த்தந்த ஆசிரியர்களுக்கு மற்றும் குருமார்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை சமர்ப்பித்து பல நன்மைகளை அடையலாம்.

துலாம்

துன்பங்களால் மனதளவில் சுலபமாக பாதிக்கப்படும் குணமும், குழந்தைபோன்று பாசமாக பழகும் தன்மை உடையவர்களுமான துலாம் ராசியினருக்கு இந்தவாரம் நீண்ட நாள்கனவுபலிக்கும். குடும்பத்தில் சுபகாரியசெலவு ஏற்படும். தொழில்துறையினர், வியாபாரிகள்வர்த்தக விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு பெறுவர். உத்தியோகஸ்தர்கள் மருத்துவ செலவுக்காக நண்பர்களிடம் கடன்பெற்று சமாளிப்பர். பள்ளி, கல்லூரிமாணவர்கள் நண்பர் வீட்டுவிசேஷங்களில் கலந்து கொண்டு உற்சாகமாக இருப்பார்கள். மருத்துவசிகிச்சை பெறுபவர்கள் கவனமாக மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டும். உடன்பிறந்தவர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் புத்தாடைகளை பரிசளிப்பதன் மூலம் நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

கடின உழைப்பும், படைப்புத்திறனும், அழகிய தோற்றமும் கொண்ட விருச்சிகம் ராசியினருக்கு இந்தவாரம் சமூக அந்தஸ்தும், மதிப்பும் அதிகரிக்கும். குடும்ப பொருளாதாரநிலையை பொறுத்த வரைவரவுக்கு தக்க செலவு ஏற்படும். தொழில்துறையினர், வியாபாரிகள் வெளியூர் பிரயாணங்களை மேற்கொள்வர். உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணி உயர்வை பெறுவார்கள். பள்ளி, கல்லூரிமாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து திட்டமிட வேண்டிய காலகட்டம் இது. உடல்நலனை பொறுத்தவரை வயதானவர்கள் மருத்துவ ஆலோசனை கொள்ளவேண்டும். குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வம் ஆகியவற்றுக்கு பால் அபிஷேகம் செய்து மல்லிகை பூமாலைசூட்டி பிராத்தனை செய்தால் வேண்டியது நடக்கும்.

தனுசு

மகிழ்ச்சியில் மிகவும் துள்ளலாகவும், துன்பத்தில் மிகவும் சோகமாகவும், மற்றவர்களுக்கு உதவுவதில் தாராளமாகவும் உள்ள தனுசு ராசியினர் இந்த வாரம் முயற்சிகளில் தடைகளை சந்தித்து வெற்றிபெறுவர்.குடும்ப நிலையைப் பொறுத்தவரைகையில் இருக்கும் சேமிப்புகரையும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் தடை தாமதங்களை சந்தித்து அதில் இருந்து விடுபட வேண்டும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவை பெற்று செயல்படுவார்கள். பள்ளிமற்றும் கல்லூரிமாணவர்கள் விளையாட்டுப்போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவர். உடல்நலனை பொறுத்தவரை கை,கால்வலி, உடல் அசதி ஏற்பட்டு சரியாகும். ஆதரவற்ற அனாதை குழந்தைகள் மற்றும் இளம் பெண்களுக்கு பொருளுதவி அல்லது பண உதவிசெய்வது நன்மைகளை தரும்.

மகரம்

கருணையும் அன்பும் மனதில் இருந்தாலும், பிடிக்காதவர்களை பிடிக்கவில்லை என்று நேருக்குநேர் சொல்லும்தன்மை கொண்ட மகரம் ராசியினருக்கு இந்தவாரம் மனதில் புதிய நம்பிக்கைகள் உருவாகும். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை பழையகடன் தீர்த்து புதியகடன் ஏற்படும்.தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் சமூகமதிப்பை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் புதியபொறுப்புகளை ஏற்று சுறுசுறுப்பாக செயல்படுவர். பள்ளி, கல்லூரிமாணவர்கள் தனித்திறமைகளை வெளிக்காட்டி பாராட்டு பெறுவார்கள். உடல் நலனை பொறுத்தவரை மன உளைச்சல் மற்றும் உழைப்பு காரணமாக அசதி ஏற்படும்.புற்று கோவிலுக்கு பூஜைக்கு தேவையானபால் மற்றும் வெள்ளை நிறமலர்கள் வழங்குவதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

கும்பம்

நேர்மறை எண்ணங்களோடு துணிச்சலாக செயல்படும்திறனும், தன்னம்பிக்கையும் கொண்ட கும்பம் ராசியினருக்கு இந்தவாரம் புதிய நம்பிக்கைகள் ஏற்படும். குடும்ப பொருளாதாரநிலையில் தடைகள் இருந்தாலும் எப்படியோ சமாளித்து விடுவீர்கள். தொழில்துறையினர், வியாபாரிகள் கடந்த காலங்களில் சந்தித்து வந்தசிக்கல்கள் விலகி லாபம் அடைவர். உத்தியோகஸ்தர்கள் வேறு நல்லபணி வாய்ப்புகள் குறித்த தகவல்களை பெறுவார்கள். பள்ளி, கல்லூரிமாணவர்கள் வேடிக்கை விளையாட்டுகளில் இருந்து விலகி பாடத்தில் கவனம்செலுத்த வேண்டும். உடல்நலனில் ஜீரணக்கோளாறு, மலச்சிக்கல் ஏற்பட்டுவிலகும். தூய்மைப் பணியாளர்களுக்கு அன்னதானம், ஆடைதானம் அளிப்பதன் மூலம் நன்மைகள் வந்து சேரும்.

மீனம்

மனதில் ரகசியம் கொண்டவர்களாகவும், திறந்தமனம் உள்ளவர்களாகவும், வேடிக்கையாக செயல்படும் மீனம் ராசியினருக்கு இந்தவாரம் பல அலைச்சல்களுக்கு பின்னர்காரியவெற்றி ஏற்படும். குடும்ப பொருளாதாரநிலையை பொறுத்தவரை செலவுகளை எப்படியோ சமாளித்து குடும்பத்தை நகர்த்துவீர்கள். தொழில்துறையினர், வியாபாரிகள் பொருட்கள்கொள் முதல் செய்வதில் வழக்கத்தை விட குறைவாக செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மனதிற்கு இனிய பணிச்சூழலில் பணியாற்றுவர். பள்ளி, கல்லூரிமாணவர்கள்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களது ஆசிகளை பெறுவது வெற்றிக்கு வழிவகுக்கும். அடிக்கடிபயணம் மேற்கொள்வதால் உடலில் அசதி ஏற்பட்டு விலகும். கோவில்குளங்களில் உள்ள மீன்களுக்கு பொரி போடுவது அல்லது வெள்ளைநிற பசுக்களுக்கு அருகம்புல் கொடுப்பது ஆகியவற்றின் மூலம் நன்மைகள் ஏற்படும்.

Tags:    

மேலும் செய்திகள்