வார ராசிபலன் 12.01.2025 முதல் 18.01.2025 வரை
12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.;
இந்த வார ராசிபலன்
மேஷம்
துணிச்சலோடு செயல்பட்டு காரிய வெற்றி பெறும் மேஷம் ராசியினர் இந்த வாரம் தொடங்கிய காரியங்களில் வெற்றி பெறுவர்.
குடும்ப பொருளாதார நிலையில் செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ற வரவு இருப்பதால் மனதில் நிம்மதி ஏற்படும். இல்லத்துணை மற்றும் அவரது சொந்தங்களை அனுசரித்து செல்லவும்.தொழில் வளர்ச்சியில் தடை தாமதங்களை சந்தித்து வந்த தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் முன்னேற்றம் அடைவர். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பணி உயர்வு பெற்று உற்சாகம் அடைவர். ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு பிரகாசமான வாய்ப்புகள் ஏற்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு உற்சாகமாக சுற்றுலா பயணம் சென்று மகிழ்வார்கள். பல இடங்களில் தண்ணீர் அருந்துவதால் ஜலதோஷம் காய்ச்சல், தலைவலி ஏற்பட்டு தக்க மருத்துவ சிகிச்சையால் குணமாகும்.
அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் அல்லது இனிப்புகள் தானமாக அளிப்பதன் மூலம் பல நன்மைகள் நாடி வரும்.
ரிஷபம்
தங்களுடைய இயல்பின்படி பொறுமையாக செயல்பட்டு காரிய வெற்றி அடையும் ரிஷபம் ராசியினர் இந்த வாரம் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்.
குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத வகையில் தனவரவும் உண்டு.தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் எதிர்பாராத செலவுகளை சந்தித்து சுமுகமாக சரி செய்வார்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் மற்றவர்களை நம்பாது தாங்களே களத்தில் இறங்கி செயல்பட வேண்டும். ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் பிரிவினர் முதலீடுகளை செய்யும் காலம் நெருங்கி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக இருந்தாலும் பாடங்களிலும் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் இது. நேரம் தவறி உண்பதால் வயிற்று கோளாறு மற்றும் முதுகுவலி ஏற்பட்டு தக்க மருத்துவ சிகிச்சையால் விலகும்.
முக்கியமான விஷயங்களில் பங்கேற்கும்போதும், பயணம் செல்லும்போதும் மஞ்சள், வெள்ளை நிற ஆடைகளை அணிந்து செல்வது காரிய வெற்றி தரும்.
மிதுனம்
உறவுகளை விட நட்புக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கும் பண்பு கொண்ட மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் பல விஷயங்களில் காரிய வெற்றி உண்டு. குடும்ப நிலையை பொறுத்தவரை எந்தச் சிக்கலையும் சுலபமாக சரி செய்யும் மனதிடம் ஏற்படும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் தங்களுடைய தொழில் விரிவாக்க முயற்சிகளை பொறுமையாக கையாள வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் நடக்கும் கட்டுமான பணிகளை நேரில் பார்வை செய்யவும். ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு தொழிலில் புதிய நுட்பங்கள் பிடிபடும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் அறிமுகமாகி, கல்வி உள்ளிட்ட பல விஷயங்களில் நன்மைகள் ஏற்படும்.வயிற்று உபாதைகளை தவிர்க்க வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது சுகாதாரமான சூழலில் உணவு, தண்ணீர் உள்ளிட்ட பானங்களை பருகுவது அவசியம்.
திருக்கோவில்களில் உள்ள மூலவர் பூஜைக்கு வாசனாதி திரவியங்கள், பூக்கள் வாங்கித் தருவது, அபிஷேகம் செய்வது ஆகியவை பல நன்மைகளை அளிக்கும்.
கடகம்
தன்னை நம்பியவர்களை எப்பாடுபட்டாவது காக்கும் உயர்ந்த உள்ளம் கொண்ட கடகம் ராசியினருக்கு இவ்வாரம் மனதில் தெளிவு பிறந்து, குழப்பங்கள் அகலும்.
குடும்ப நிலையை பொறுத்தவரை செலவுகள் கையை கடித்தாலும் ஒருவாறு சமாளித்து விடுவீர்கள். குடும்ப அங்கத்தினருக்கு அரசுவழி ஆதாயம் உண்டு. தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் நீண்ட நாட்களாக திட்டமிட்ட தொழில் விரிவாக்க பணிகளை மேற்கொள்வர். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு நிர்வாகத்தின் பாராட்டு பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எண்ணெய், பெட்ரோல் நிறுவன பங்குகளில் லாபம் பெறுவர். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய முதலீடுகளை செய்யலாம். பள்ளி, பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களுடைய எதிர்கால லட்சியத்தை உருவாக்கிக் கொள்வதற்கான வழிகாட்டுதல் கிடைக்க பெறுவார்கள். பல இடங்களுக்கும் பயணம் செய்வதால் அசதி, உடல் சோர்வு ஏற்படும் அதனால் தக்க ஓய்வு மற்றும் மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
ராகு காலங்களில் புற்று கோவில் அம்மனுக்கு அல்லது நாகருக்கு குங்கும அர்ச்சனை செய்வது நல்ல பலன்களை கொண்டு வந்து சேர்க்கும்.
சிம்மம்
எந்த காரியத்தையும் அவசியம், காலநிலை ஆகியவற்றை அறிந்து செயல்படும் திறன் பெற்ற சிம்ம ராசியினருக்கு இந்த வாரம் தடைபட்ட சுப காரியங்கள் நிறைவேறும்.குடும்ப பொருளாதார நிலை மேம்படும். மனதை அரித்து வந்த பழைய கடன்களை திருப்பி செலுத்துவீர்கள்.தொழில்துறையினர், வியாபாரிகள் எதிர்பாராத சிக்கல்களை சந்தித்து அவற்றை வெற்றிகரமாக கடந்து செல்வர். உத்தியோகஸ்தர்கள் பணி சார்ந்த புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு பெறுவர். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு பங்குகளில் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கான புதிய விஷயங்களை அறிந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஜலதோஷம், காய்ச்சல், கை-கால் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும்.
ஆதரவற்ற நிலையில் உள்ள அல்லது அனாதை ஆசிரமங்களில் வசித்து வரும் முதியோர்களுக்கு ஆடை அல்லது அன்னதானம் செய்வது பல நன்மைகளை தரும்.
கன்னி
சிக்கலான சூழ்நிலையையும் இனிமையாக மாற்றிக் கொள்ளும் திறன் பெற்ற கன்னி ராசியினர் இந்த வாரம் பல தடை தாமதங்களுக்கிடையில் நினைத்த காரியத்தை சாதிப்பார்கள்.
குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை கடந்த காலங்களில் இருந்த முடக்க நிலை படிப்படியாக விலகும். எதிர்பார்த்த வங்கி கடன் வந்து சேரும்.தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் தொழில் விரிவாக்க பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் தொடர்பு கிடைக்கப்பெற்று நன்மைகளை பெறுவார்கள்.ரியல் எஸ்டேட் துறையினருக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது. ஷேர் மார்க்கெட் பிரிவினர் பெட்ரோலிய நிறுவன பங்குகளில் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி தங்கள் கல்வி நிறுவனங்களுக்கு புகழ் சேர்ப்பர்.பாஸ்ட் புட் வகைகளை இரவில் உண்பதை தவிர்க்க வேண்டும் அதனால் வயிற்று கோளாறுகள், அஜீரணம் ஆகியவை ஏற்படுவதை தவிர்க்கலாம்.
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களை வணங்கி அவர்களது ஆலோசனை மற்றும் ஆசிகளை பெறுவது பல நன்மைகளை ஏற்படுத்தும்.
துலாம்
காரிய வெற்றிக்காக பல்வேறு தந்திரங்களை கையாண்டு ஜெயித்துக் காட்டும் துலாம் ராசியினர் இந்த வாரம் இறை உணர்வோடு செயல்பட்டு காரியத் தடைகளை கடந்து செயல்படுவர்.
குடும்ப செலவுகள் அதிகரித்தாலும் தக்க பொருள் வரவும் உண்டு. குடும்பத்தில் விழாக்கால மகிழ்ச்சி நிலவும்.தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் இந்த வாரம் தொழில் வெற்றிக்கான பல விஷயங்களை அறிந்து செயல்படுத்துவார்கள். அதிகார பதவிகளில் உள்ள உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான சிக்கல்களை சந்தித்து வெற்றி பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் தங்களுடைய பொறுமைக்கு ஏற்ற நன்மைகளை பெறக்கூடிய நேரம் நெருங்கிவிட்டது. ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு நிறுவன பங்குகளில் ஆதாயம் அடைவர். மாணவர்களுக்கு வார விடுமுறை உற்சாகமாக இருக்கும். உறவினர் வீடுகளுக்கு சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பார்கள். உடல் நிலையை பொறுத்தவரை மற்றவர்கள் தரும் தொல்லைகளால் மன உளைச்சல், உடல் சோர்வு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் விலகும்.
வீடுகளில் காலை, மாலை இரு நேரங்களிலும் குங்கிலியம் தூபம் இடுவதும், பைரவ அஷ்டோத்திரம் ஒலிக்கச் செய்வதன் மூலமும் பல நன்மைகள் ஏற்படும்.
விருச்சிகம்
எளிமையான குணநலம், பழக்க வழக்கம் காரணமாக மற்றவர்களால் மதிக்கப்படும் தன்மை கொண்ட விருச்சிக ராசியினருக்கு இந்த வாரம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல காரியங்கள் கைகூடும்.
குடும்ப பொருளாதார நிலை உயர்ந்து இல்லத்தரசிகள் கடன்களை திருப்பி செலுத்தி நிம்மதி பெருமூச்சு விடுவர். வீட்டுக்கு தேவையான பர்னிச்சர்களை வாங்குவீர்கள். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் இவ்வாரம் நல்ல மாற்றங்களை செய்து முன்னேற்றப் பாதையில் நடையிடுவர். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் சந்தித்த சிக்கல்கள் விலகி எதிர்பார்த்த ஆதாயத்தை பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் விளம்பரங்களை மேற்கொண்டு தொழிலை விருத்தி செய்வர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் கட்டிட பொருள் தயாரிப்பு நிறுவன பங்குகளில் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொறுப்புகளை உணர்ந்து கல்வி கற்க தேவையான ஆலோசனைகளை பெறுவர். இருமல், காய்ச்சல், கை-கால் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அகலும். இரவு அதிக நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும்.
இவ்வாரம் முக்கிய விஷயங்களுக்காக பயணம் போகும்போது சிவப்பு நிற ஆடை அணிவதை தவிர்ப்பதும், ஆதரவற்ற முதியோர்களுக்கு பொருளுதவி செய்வதும் நன்மைகளை ஏற்படுத்தும்.
தனுசு
தங்கள் குற்றம் குறைகளை அறிந்து சிறப்பாக தங்களை வளர்த்துக்கொண்டு வெற்றி பெறும் மனதிடம் கொண்ட தனுசு ராசியினர் இந்த வாரம் சொந்தபந்தங்களுடன் வாத விவாதங்களை தவிர்க்க வேண்டும்.
குடும்ப பொருளாதார நிலையில் எதிர்பார்த்த பணவரவு தாமதம் ஆனாலும் சரியாக வந்து சேர்ந்துவிடும். இல்லத்துணையுடன் வாக்குவாதம் கூடாது. தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய கூட்டாளிகள், தொடர்புகள் கிடைத்து சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் நல்ல மாற்றங்களை பணியிடங்களில் சந்திப்பார்கள்.ரியல் எஸ்டேட் துறையினர் நீர்நிலை பகுதிகளில் புதிய திட்டங்களை தொடங்குவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வெளிநாட்டு பங்குகளில் ஆதாயம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்கால முன்னேற்றத்துக்கான கருத்துப்பட்டறை, பயிற்சிகளில் பங்கு பெறுவர். காலம் தவறி வெளியிடங்களில் உணவு உண்பதால் வயிற்றுக் கோளாறு, தொண்டை வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் அகலும்.
ஆரம்பப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எழுதுபொருள்கள், நோட்டு புத்தகங்கள் வாங்கி தருவதால் பல நன்மைகள் ஏற்படும்.
மகரம்
கொக்குப் போல காலம் வரும் வரை அமைதியாக இருந்து காரிய வெற்றி பெறும் மகர ராசியினர் இந்த வாரம் பல சுபகாரியங்களில் கலந்து கொண்டு பிசியாக இருப்பார்கள்.
குடும்ப நிலையில் ரத்த உறவுகளை அனுசரித்து செல்வது அவசியம். எதிர்பாரா செலவுகளை சமாளிக்க திட்டமிட வேண்டும். சொந்தபந்தங்கள் விஷயத்தில் சற்று விலகியே இருக்கவும்.தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை பெற இரவு-பகல் பாராமல் உழைக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் ஆதரவால் ஆதாயம் பெறுவர்.ஷேர் மார்க்கெட் பிரிவினர் வேளாண் நிறுவன பங்குகளில் லாபம் அடைவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் பெருநகரங்களில் கட்டுமான திட்டங்களை தொடங்குவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வழக்கத்தை விட கூடுதல் கவனம் செலுத்தி கல்வி கற்க வேண்டும்.பல இடங்களுக்கும் சென்று வருவதால் மன உளைச்சல், தலைவலி, முதுகுவலி ஏற்பட்டு தக்க மருத்துவத்தால் குணமாகும்.
ஆதரவற்ற வயதான பெண்மணிகளுக்கு முடிந்தவரை ஆடைதானம், அன்னதானம் செய்து அவர்கள் ஆசிகளை பெறுவது பல நன்மைகளை தரும்.
கும்பம்
எந்த விஷயத்தையும் இருவித கண்ணோட்டத்துடன் பார்க்கும் தனித்தன்மை கொண்ட கும்பம் ராசியினர் இந்த வாரம் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் அடைவார்கள்.
குடும்ப பொருளாதார நிலையில் கடன் வாங்காமல் சமாளிப்பதுடன், சேமிக்கவும் திட்டமிடுவீர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உள்ளம் மகிழ்வீர்கள். தொழில் துறையினர், வியாபாரிகள் மனதில் போட்ட திட்டங்களை நேரம் பார்த்து நிறைவேற்றுவார்கள். உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தினர் மூலம் எதிர்பாராத ஆதாயங்களை பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் ஹோட்டல் தொழில் நிறுவன பங்குகளில் லாபம். அடைவார்கள். ரியல் எஸ்டேட் பிரிவினர் கடன்களை தீர்க்கும் காலம் கைகூடிவிட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்கால நன்மைக்கேற்ற கணினி, பொறியியல் தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை பெறுவர். தலைசுற்றல், மயக்கம் வருவதுபோல இருந்தால் தக்க மருத்துவ சிகிச்சை, ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மன அமைதி முக்கியம்.
அருகில் உள்ள திருக்கோவிலின் கருவறையில் எரியும் தீபத்திற்கு நெய் அல்லது நல்லெண்ணெய் மற்றும் ஊதுபத்தி ஆகியவற்றை வாங்கி தருவது நன்மைகளை தரும்.
மீனம்
சமூகம் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையில் அக்கறை கொண்ட தூய்மை ஆர்வலர்களாகவும், அதற்காக மற்றவர்களோடு இணைந்து செயல்படும் மீனம் ராசியினர் இவ்வாரம் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கைவரப்பெறுவர்.
குடும்ப நிலையை பொறுத்தவரை குடும்ப உறவுகளை அனுசரித்து சென்று பல சிக்கல்களை சமாளிப்பீர்கள். இல்லத்தரசிகளுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டு.தொழில்துறையினர், வியாபாரிகள் தடைகளை சந்தித்த நிலையிலும் திட்டமிட்ட லாபத்தை அடைவர். உத்தியோகஸ்தர்கள் பொறுமையாக செயல்பட்டு உயர்அதிகாரிகள் மனதில் இடம் பிடிப்பர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் அரசு சார்ந்த பங்குகளில் ஆதாயம் பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் முதலீடு செய்வார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்ப பயிற்சிகளை, அரசு போட்டித் தேர்வுகளை சந்திக்கும் ஆலோசனை கிடைக்கப் பெறுவர். நேரத்துக்கு சாப்பிடாத காரணத்தால் வயிற்று உபாதைகள் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ளும் முதியோர் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அனாதை ஆசிரமங்களில் வசிப்பவர்களுக்கு ஆடைதானம், அன்னதானம் செய்வதன் மூலம் பல நன்மைகள் வந்து சேரும்.