வார ராசிபலன் 05.01.2025 முதல் 11.01.2025 வரை
12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.;
இந்த வார ராசிபலன்
மேஷம்
நண்பர்களுக்கு சிரமம் என்றால் ஓடிச்சென்று உதவும் குணம் படைத்த மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் பொன்-பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை செலவுகளை திட்டமிட்டு சமாளிக்க வேண்டும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் புதிய ஊர்களில் கிளைகளை தொடங்குவார்கள். உத்தியோகஸ்தர்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதுமையாக சிந்தித்து, செயல்பட்டு தேர்வுகளிலும், விளையாட்டிலும் பல பரிசுகளை பெறுவார்கள். உடல் நலனை பொறுத்தவரை காய்ச்சல் மற்றும் கை-கால் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் குணமடையும்.
மாலை நேரங்களில் கோவிலில் உள்ள பசு மாடுகளுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழங்கள் அளிப்பதன் மூலம் நன்மைகள் பெருகும்.
ரிஷபம்
திட்டமிட்டு காரியங்களை செயல்படுத்தி மனதில் நினைத்தபடி காரிய வெற்றி அடையும் ரிஷபம் ராசியினருக்கு இந்த வாரம் சமூகத்தில் அந்தஸ்து மதிப்பும் ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்ட பழைய கடன்களை திருப்பி செலுத்தி விடுவீர்கள்.
தொழில்துறையினர், வியாபாரிகள் நீண்ட நாட்களாக திட்டமிட்ட விஷயங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பர். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை ஏற்று செயல்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு புதிய ஊர்களுக்கு உற்சாக பயணம் செய்வார்கள். உடல் நலத்தை பொறுத்தவரை அடிவயிற்றில் வலி, வாந்தி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
தெருக்களில் பணியாற்றும் தூய்மை மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு அன்னதானம், பொருள் உதவி செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.
மிதுனம்
மற்றவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் உடனடியாக அவர்களுக்கு உதவி செய்யும் நல்ல மனம் கொண்ட மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் பல்வேறு காரிய வெற்றிகள் கிடைக்கும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை செலவுகளை சமாளித்து குடும்பத்தை நகர்த்துவீர்கள்.
தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் பொருட்கள் கொள்முதலில் வழக்கத்தை விட குறைவாக செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மனதிற்கு இனிய சூழலில் பணியாற்றுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஆலோசனை பெறுவது வெற்றிக்கு வழிவகுக்கும். உடல் நலத்தை பொறுத்தவரை அடிக்கடி பயணம் மேற்கொள்வதால் அசதி ஏற்பட்டு விலகும்.
பொருளாதார வசதி குறைந்த குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு திருமணத்திற்கான பொருள்தானம் மற்றும் ஸ்வர்ணதானம் (தங்கம்) இயன்றவரை செய்வது பல நன்மைகளைத் தரும்.
கடகம்
பல்வேறு சிரமங்களை மனதிற்கு இடையே புதைத்துக் கொண்டு மற்றவர்களிடம் சிரித்துப் பேசி மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டும் மனதிடம் கொண்ட கடகம் ராசியினருக்கு இந்த வாரம் திடீர் தன வரவு உண்டு. குடும்ப பொருளாதார நிலையில் தடைகள் பல இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.
தொழில்துறையினர், வியாபாரிகளுக்கு கடந்த கால தொழில் சிக்கல்கள் விலகி நல்ல லாபம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் வேறு நல்ல பணி வாய்ப்பு குறித்த தகவல் பெறுவார்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபட்டாலும், அதே அளவு பாடத்திலும் கவனம் செலுத்த வேண்டும். உடல் நலனை பொறுத்தவரை ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் ஆகியவை ஏற்பட்டு விலகும்.
முதியோர் இல்லத்திற்கு தேவையான மின் உபயோக பொருட்களை வாங்கி தருவதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.
சிம்மம்
நண்பர்கள் தவறு செய்தாலும் அதை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு அமைதியாக நடந்து கொள்ளும் தன்மை பெற்ற சிம்மம் ராசியினருக்கு இந்த வாரம் சுபச் செய்திகள் வந்து சேரும். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை பழைய கடன்களை திருப்பி செலுத்துவீர்கள்.
தொழில்துறையினர், வியாபாரிகள் சிறப்பான வளர்ச்சி பெறுவதுடன் சமூக மதிப்பை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று திறமையாக செயல்படுவர். கல்லூரி மாணவர்கள் தங்கள் தனி திறமைகளை வெளிக்காட்டி பரிசு பெறுவார்கள். உடல் நலனை பொறுத்தவரை மன உளைச்சல், உழைப்பு காரணமாக அசதி ஏற்பட்டு விலகும்.
ஆதரவற்ற வயதான பெண்மணிகளுக்கு அன்னதானம், ஆடைதானம் செய்வதன் மூலம் நன்மைகள் வந்து சேரும்.
கன்னி
கிடைக்கும் சந்தர்ப்பங்களை சிறப்பாக பயன்படுத்தி வெற்றிக்கனியை பறிக்கும் திறமை கொண்ட கன்னி ராசியினர் இந்த வாரம் நீண்ட நாட்களாக மனதில் நினைத்து வந்த காரியங்களை செய்து முடிப்பார்கள். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை கையில் இருக்கும் சேமிப்புகள் கரையும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் தங்களுடைய அனுபவங்களை பயன்படுத்தி கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடுபட வேண்டும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று செயல்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெளியூர் சென்று விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்துவர்.
குலதெய்வம் அல்லது வீட்டிற்கு அருகில் உள்ள பெண் தெய்வங்களுக்கு மலர்மாலை சமர்ப்பணம் செய்தால் பல நன்மைகள் வந்து சேரும்
துலாம்
துன்பங்களை சந்தித்தாலும் கூட நிச்சயம் அவற்றை கடந்து வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை இயல்பாக பெற்றுள்ள துலாம் ராசியினருக்கு இந்த வாரம் பிரயாணங்களால் பல நன்மைகள் வந்து சேரும். குடும்ப வருமானம் பெருகும். தான தர்மங்களை செய்வீர்கள்.
தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் பல நாட்களாக எதிர்பார்த்து வந்த முன்னேற்றங்கள், லாபங்கள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் தங்களுக்கு அளித்த பணிகளை கவனமாக செய்து வர வேண்டியது அவசியம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு மகிழ்ச்சியாக பொழுதுபோக்கும் அதே சமயம் பாடங்களிலும் அதே அளவு கவனம் செலுத்த வேண்டும். வண்டி வாகனங்களில் நிதானமாக செல்வது அவசியம். உடல் நலனை பொறுத்தவரை மன உளைச்சல் மற்றும் முதுகு வலி ஆகியவை ஏற்பட்டு சிகிச்சையால் விலகும்.
அருகிலுள்ள சிவபெருமான் கோவிலில் விபூதி அபிஷேகம் செய்து அந்த திருநீறை நெற்றியில் அணிய பல நன்மைகள் உண்டு.
விருச்சிகம்
நண்பர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் அளவாகப் பழகும் தன்மை கொண்ட விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் மனதில் தெளிவும், வண்டி வாகன சேர்க்கையும் ஏற்படும். குடும்ப நிலையில் வாழ்க்கை துணையிடம் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும்.
தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் நுட்பமாக செயல்பட்டு சிக்கல்களை தீர்ப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்களுடைய அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூடுதல் கவனத்தோடு பாடங்களில் கவனம் செலுத்துவதுடன், இருசக்கர வாகனங்களில் மெதுவாக செல்ல வேண்டும். உடல் நலனைப் பொறுத்தவரை அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டு விலகும்.
சிவலிங்கத்துக்கு சந்தன அபிஷேகம் அல்லது பெருமாளுக்கு வஸ்திரம் சமர்ப்பணம் செய்வது பல நன்மைகளை ஏற்படுத்தும்.
தனுசு
சொன்ன விஷயங்களை சொன்னபடி செய்ய வேண்டும் என்ற மன உறுதி கொண்ட தனுசு ராசியினர் இந்த வாரம் நண்பர்களுடைய ஆதரவோடு பல நல்ல விஷயங்களை செய்வீர்கள். குடும்ப நிலையை பொறுத்தவரை சுப காரிய செலவுகள் ஏற்படும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் தொழில் விரிவாக்கம் செய்வதற்கான வசதி வாய்ப்புகளை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத மருத்துவ செலவுகளை கடன் பெற்று சமாளிப்பார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கள் நண்பர்களுடைய வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு உற்சாகமாக இருப்பார்கள். உடல் நலத்தை பொறுத்தவரை மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மாலை நேரங்களில் அருகில் உள்ள கோவிலில் ஆறு நெய் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடுவது பல நன்மைகளை தரும்.
மகரம்
தமக்குரிய காலம் வரும் வரை அமைதியாக காத்திருந்து பின்னர் விஸ்வரூபமாக செயல்படும் திறமை படைத்த மகரம் ராசியினர் இந்த வாரம் பல்வேறு வழிகளில் தன வரவை பெறுவார்கள். சமூக அளவில் செல்வாக்கு பெருகும். குடும்ப பொருளாதாரம் நிலையை பொறுத்தவரை வரவுக்கு ஏற்ற செலவு ஏற்படும்.
தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் வெளியூர் பிரயாணங்களை மேற்கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பணி உயர்வை பெறுவார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களுடைய எதிர்காலம் குறித்து கவனமாக திட்டமிட வேண்டும். உடல் நலனை பொறுத்தவரை வயதானவர்கள் மருத்துவ ஆலோசனை, சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவரவர் இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்தின் மந்திரத்தை 18 முறைகள் உச்சாடனம் செய்து வழிபடுவது பல நன்மைகளை ஏற்படுத்தும்.
கும்பம்
எப்படிப்பட்ட கஷ்டமான சூழல் வந்தாலும் அடுத்த நிலையை நோக்கி நகர்ந்து செல்லும் மன இயல்பு கொண்ட கும்பம் ராசியினருக்கு இந்த வாரம் பல்வேறு சுபச் செய்திகள் வந்து சேரும். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை பழைய கடன்கள் தீரும். புதிய கடன்கள் ஏற்படும்.
தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகளுக்கு இது நல்ல லாபகரமான காலகட்டம். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் பணி சம்பந்தமான விஷயங்களை மட்டும் கவனிப்பது நல்லது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டு கல்வி மற்றும் பணிவாய்ப்பு குறித்த தகவல்களை பெற்று எதிர்காலம் குறித்து திட்டமிடுவர்.
உடல் ஊனமுற்ற வறியவர்களுக்கு பொருள் தானம் அல்லது அன்னதானம் செய்வது பல நன்மைகளை ஏற்படுத்தும்.
மீனம்
மனதில் உள்ள சிரமங்களை நண்பர்களிடம் வெளிப்படையாக தெரிவித்து ஆறுதல் தேடும் தன்மை கொண்ட மீனம் ராசியினர் இந்த வாரம் நீண்டகால திட்டங்களை செயல்படுத்தி மகிழ்வார்கள். குடும்ப பொருளாதார நிலையில் நல்ல தன வரவும், ஆடை ஆபரண சேர்க்கையும் உண்டு.
தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் திட்டமிட்டு துணிச்சலாக செயல்பட்டு வெற்றி பெறுவர். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து சென்று அவரது ஆதரவை பெற வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான வெற்றி பெறுவார்கள். உடல் நலனை பொறுத்தவரை கை-கால்களில் வலி, உடல் அசதி ஆகியவை ஏற்பட்டு சிகிச்சையால் குணமாகும்.
கோவில் குளங்களில் உள்ள மீன்களுக்கு தீனியாக பொரி போடுவது அல்லது பக்தர்களுக்கு பிரசாதமாக இனிப்பு வழங்குவதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.