கலைகளில் அதிக ஈடுபாடு கொண்ட மகர ராசி அன்பர்களே!
வழக்கமான பொறுமையால் மறைமுகமான எதிர்ப்பை சமாளிப்பீர்கள். தளர்வடைந்த காரியங்களில் தக்கவர்களின் ஆதரவோடு வெற்றியை நோக்கிச் செல்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செல்வாக்குடன் கூடிய புதிய பொறுப்புகள் வந்துசேரும். சிலருக்கு அதிகாரமுள்ள பதவிகள் கிடைக்கக்கூடும். சொந்தத் தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர் மூலம், தொழில் ரீதியான பொருளாதார முன்னேற்றத்திற்கு முயற்சிப்பார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் வழக்கமான லாபம் குறையாது. குடும்பத்தில் நீண்ட காலமாக வராமல் இருந்த உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், செலவுகளும் வரிசையில் நிற்கும். பெண்களுக்கு ஆரோக்கிய குறை ஏற்பட்டு அகலும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று உற்சாகமாக பணியாற்றுவர்.
பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை சுதர்சன பெருமாளுக்கு மலர் மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.