மகரம் - வார பலன்கள்

Update:2023-09-08 01:21 IST

கலைநுணுக்கத்தோடு எதையும் செய்யும் மகர ராசி அன்பர்களே!

புதன் மற்றும் வியாழன் சந்திராஷ்டமம் உள்ளதால் தன வரவுகள் தள்ளிப் போகும். நீண்டகாலமாகச் சந்திக்காத ஒருவரை சந்தித்து மகிழ்வீா்கள். உத்தியோகத்தில் மந்தமான நிலை மாறி சுறுசுறுப்பு ஏற்படும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு குறைந்த லாபம் இருந்தாலும், வியாபாரம் நன்றாக நடைபெறும். வியாபார நுணுக்கம் தெரிந்த கூட்டாளி ஒருவரை, அதிக மூலதனத்துடன் சேர்த்துக் கொள்ள மற்றக் கூட்டாளிகளுடன் ஆலோசிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் தோன்றும் பிரச்சினைகளை விட்டுக் கொடுப்பதன் மூலம் சமாளிப்பீர்கள். புதிய கடன்களைப் பெற்று பழைய கடன்களைத் தீர்ப்பீர்கள். உறவுகளுக்குள் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலைக்கு தள்ளப்படுவீர்கள். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் களிப்புடன் புதிய பணியில் ஈடுபடுவார்கள்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் மாலை சூட்டுங்கள்.

மேலும் செய்திகள்