29.9.2023 முதல் 5.10.2023 வரை
எதையும் யோசித்து செய்யும் மகர ராசி அன்பர்களே!
எடுத்துக் கொண்ட காரியங்களில் தீவிர முயற்சி செய்தாலும், சிலவற்றில் மட்டுமே வெற்றியடைவீர்கள். எந்த செயலிலும் கடின உழைப்பும், கவனமும் அவசியம். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாகலாம். நண்பரின் விடுமுறையால் அவரது பணியையும் சேர்த்து செய்யும் நிலை உருவாகலாம். சொந்தத்தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். வேலையும் பண வரவும் அதிகமாகும். புதிய நபர் ஒருவருக்கு அவரது வேலையை விரைந்து செய்து கொடுக்க வேண்டியதிருக்கலாம். கூட்டுத்தொழிலில் வியாபாரம் சுமாராக நடைபெற்றாலும், வழக்கமான லாபம் குறையாது. புதிய கிளைகள் தொடங்கவும், வியாபார தலத்தை விரிவுபடுத்தவும் ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகள் சாமர்த்தியமாகச் சமாளிக்கப்படும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.