மகரம் - வார பலன்கள்

Update:2023-10-20 01:07 IST

20-10-2023 முதல் 26-10-2023 வரை

நேர்மைக்கு கட்டுப்பட்ட மகர ராசி அன்பர்களே!

உற்சாகத்தோடு பணிகளில் ஈடுபட்டு பல காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். சிறு சிறு தடங்கல்கள் வந்துபோகும். எதிர்பார்த்த தன வரவுகள் வந்து சேரும். வரவுகளை விட செலவு அதிகரிக்கும். முக்கியமான தகவல்களால் எதிர்பார்த்த அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், அவசர வேலை ஒன்றை சிறப்பாகச் செய்து, உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவர். பணிகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். சொந்தத் தொழில் நன்றாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர் வருகை உண்டு. கூட்டுத்தொழிலில் வியாபாரம் நன்கு நடைபெற்றாலும், லாபம் சுமாராகவே இருக்கும். வியாபார அபிவிருத்திக்காக கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசிப்பது நல்லது. குடும்பத்தில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். கலைஞர்கள் வாழ்வில் திருப்பத்தை சந்திப்பர். பங்குச்சந்தை சுமாரான லாபத்தை ஈட்டும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.

மேலும் செய்திகள்