மகரம் - வார பலன்கள்

Update:2023-10-27 01:35 IST

27-10-2023 முதல் 2-11-2023 வரை

உயர்வான எண்ணம் கொண்ட மகர ராசி அன்பர்களே!

உங்கள் பணிகள் பலவற்றில் முன்னேற்றமான பலன்கள் ஏற்பட்டாலும், சிறு சிறு தடங்கல்களும் காணப்படும். வீடு அல்லது மனை வாங்கும் எண்ணம் இருப்பவர்கள், சிறிது காலம் பொறுத்திருப்பது நன்மையளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பொறுப்புகளில் மிகுந்த கவனமாக இருக்காவிட்டால், பிரச்சினைகளை சந்திக்கும் நிலை ஏற்படலாம். சொந்த தொழில் செய்பவர்கள் பரபரப்பாக வேலையில் ஈடுபட்டாலும், ஆதாயம் எதிர்பார்த்தபடி இருக்காது. புதிய வாடிக்கையாளர்கள் சேர்வதால், ஓய்வு நேரமின்றி, பணிகளில் ஈடுபடுவீர்கள். கூட்டுத்தொழில் சுமாராக நடைபெறும். அதிக லாபம் பெற, அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். குடும்பத்தில் சிறு சிறு தொல்லைகள் தலைகாட்டும். கலைஞர்கள் கடினமான பணிகளில் கவனமாக இருங்கள். பங்குச்சந்தை லாபம் தருவதாக அமையும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டுங்கள்.

மேலும் செய்திகள்