சிந்தனைத் திறன் மிகுந்த மகர ராசி அன்பர்களே!
எடுத்த செயல்களில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் போராடுவீர்கள். சில காரியங்கள் உங்கள் எண்ணப்படி நடைபெறும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு அலுவலகத்தில் அதிக பொறுப்புகளுடன் பதவி உயர்வும் கிடைக்கலாம். சகப் பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் ஓய்வில்லாமல் பணிகளில் கவனம் செலுத்துவார்கள். தொழில் முன்னேற்றத்துக்குப் புதிய வாடிக்கையாளர் பெரிதும் உதவியாக இருப்பார்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்கள், வியாபார ஸ்தலத்தை விரிவாக்கத் திட்டமிடுவீர்கள். வியாபாரம் நன்கு நடைபெற்று எதிர்பார்க்கும் லாபம் காணப்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை நடத்த முன்னேற்பாடுகளைச் செய்வீர்கள். கலைஞர்கள் பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவர். பங்குச்சந்தை லாபத்துடன் நடைபோடும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.