மகரம் - வார பலன்கள்

Update: 2023-06-15 19:56 GMT

பிறர் குறைகளை பெரிதுபடுத்தாத மகர ராசி அன்பர்களே!

பணிகளில் அதிகக் கவனம் செலுத்தினாலும், சில காரியங்களில் தளர்வு ஏற்படலாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். கூடுதல் வருமானம் பெற திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், சக ஊழியர்களின் பணியையும் சேர்த்து செய்ய நேரலாம். பணியில் ஏற்பட்ட தவறை திருத்த, மீண்டும் அதே பணியை செய்ய வேண்டியதிருக்கும். மேலதிகாரிகளின் போக்கு சாதகமாக அமையும்.

சொந்தத் தொழிலில் புதிய வாடிக்கையாளர் மூலம், தொழில் அபிவிருத்திக்கான தகவல்கள் வந்துசேரும். கூட்டுத்தொழிலில் கமாரான லாபம் இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வரும். அவற்றை சுலபமாகச் சமாளித்து விடுவீர்கள். பணியாற்றும் பெண்களுக்கு ஊக்கத்தொகை, சம்பள உயர்வு கிடைக்கலாம். கலைஞர்களுக்கு, பழைய நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் தேடி வரக்கூடும்.

பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சூட்டி, நெய் தீபமேற்றுங்கள்.

மேலும் செய்திகள்