சலியாத மனதுடன் பணியாற்றும் மகர ராசி அன்பர்களே!
சற்று பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயலாற்றுவீர்கள். நண்பர்கள் வலிய வந்து உதவி செய்வார்கள். பிரிந்த கணவன்- மனைவி மீண்டும் ஒன்றுசேர வாய்ப்புண்டு. உயர் பதவியில் இருப்பவர்கள் கட்டளைகள் இடுவதன் மூலமும், திட்டமிட்டு செயல்படுவதாலும் உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். உங்களுக்கு நெருங்கிய உறவினர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகள் கூட, பெரியவர்களின் தலையீடு காரணமாக அமைதி வழிக்குத் திரும்பும். இழந்த பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள்.
ஒரு சிலருக்கு சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். உங்களுடைய நீண்டநாள் சேமிப்பு அதற்கு உதவும் வகையில் இருக்கும். அரசுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு பாராட்டும், பணவரவும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு ஸ்ரீராமஜெயம் எழுதி, மாலையாக கோர்த்து சூட்டி வழிபடுங்கள்.