மகரம் - வார பலன்கள்

Update:2023-05-26 01:41 IST

நம்பிக்கையோடு செயலாற்றும் மகர ராசி அன்பர்களே!

சனிக்கிழமை முதல் திங்கள் காலை 7.38 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எடுத்த காரியங்கள் சிலவற்றில் மட்டுமே வெற்றி காண இயலும். காரியங்களில் வெற்றியடைய தக்க நபர்களின் உதவியை நாடுவீர்கள். வரவேண்டிய திட்டமிட்ட வருமானமும் சிறிது தாமதத்திற்குப் பிறகு வந்து சேரலாம்.

உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு வேலையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். பொறுப்புகள் அதிகமாகி தொல்லைப்பட நேரிடும். எதிர்பார்க்கும் இனங்கள் தள்ளிப்போகும். சொந்தத் தொழில் செய்பவர்கள், அதிகப்பணி காரணமாக வாடிக்கையாளர்களுக்குக் குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடித்து கொடுக்க முடியாமல் போகலாம். கூட்டுத் தொழிலில் வருமானம் வழக்கம் போல் காணப்படும். குடும்பத்தில் கடன் சம்பந்தமாக சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டி வழிபட்டு வாருங்கள்.

மேலும் செய்திகள்