எதிலும் துணிச்சலுடன் செயல்படும் மகர ராசி அன்பர்களே!
உங்கள் முயற்சிகள் பலவற்றில் முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். முக்கியமானவர்களின் ஆதரவு உங்களுக்கு துணை இருக்கும். பணவரவுகள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், அதன் மூலம் அதிக செல்வாக்கும் ஏற்படும். சக நண்பர்களின் ஆதரவுடன் முக்கியமான பணிகளில் கவனம் செலுத்துவீர்கள்.
சொந்தத் தொழிலில் இருப்பவர்கள் புதிய நபர்கள் மூலம் அதிக லாபம் அடைவார்கள். பணவரவு மகிழ்வளிப்பதாக இருக்கும். குடும்பத்தில் மங்கல காரியங்கள் நடைபெறும். மகன் அல்லது மகளுக்கு அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பெண்கள் முக்கிய காரியத்துக்காக உறவினர் உதவி நாட வேண்டி வரும். கலைஞர்கள் பணிகளில் அதிக உற்சாகத்துடன் செயல்படுவர். பங்குச்சந்தை வியாபாரம் நன்றாக நடைபெறும்.
பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு, அருகம்புல் மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.