பிறக்கு உதவும் மனம் படைத்தமகர ராசி அன்பர்களே!
நீங்கள் எடுக்கும் காரியங்கள் சிலவற்றில் முன்னேறுவீர்கள். சில செயல்களில் ஏற்படும் தளர்வுகளை, தக்கவர்களின் உதவியோடு வெற்றியடைய முற்படுவீர்கள். மற்றவர்களை நம்பி, பொறுப்புகளை ஒப்படைக்காமல் நீங்களே வேலைகளைச் செய்வது நன்மை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளில் கவனமாக இல்லாவிட்டால், தவறுகள் ஏற்பட்டு மேலதிகாரிகளின் கோபப் பார்வைக்கு இலக்காக நேரலாம். சகப் பணியாளர்களின் பணிகளையும் சேர்த்து செய்யும் சூழல் உருவாகும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு கூடும். புதிய வாடிக்கையாளா்களின் வருகையால் பொருளாதார உயர்வைப் பெறுவீா்கள். குடும்பத்தில் அமைதியான போக்குத் தென்பட்டாலும், சிறு சிறு பிரச்சினைகளும் ஏற்படத்தான் செய்யும். கலைஞர்கள், பணிகளில் உற்சாகமாக ஈடு படுவர்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்கி வாருங்கள்.