சாஸ்திரத்தில் ஈடுபாடு கொண்ட மகர ராசி அன்பர்களே!
திங்கள் மாலை 3.48 மணி முதல் புதன் வரை சந்திராஷ்டமம் உள்ளதால், பேச்சுவார்த்தைகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சிலருக்கு, அலுவலக வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் அமையும். சகப் பணியாளர்களின் பணியையும் நீங்களே செய்ய நேரிடும்.
சொந்தத்தொழில் செய்பவர்கள், தொழில் முன்னேற்றத்திற்காக அதிகம் செலவிடுவீர்கள். மூலப்பொருட்களை வாங்கி சேமிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் பயனளிப்பதாக இருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள், போட்டிகளைச் சமாளிக்க கூட்டாளிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். பங்குச்சந்தையில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது.
கலைஞர்கள், கடினமான வேலைகளில் நேரடியாக ஈடுபடும்போது கவனமாக இருங்கள். குடும்பத்தில் உள்ள கடனைத் தீர்ப்பதற்கு, புதிய கடன் வாங்கும் நிலை உருவாகலாம்.
வழிபாடு:- வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு, நெய் தீபமிட்டு வழிபட்டால் ஏற்றமிகு வாழ்வு அமையும்.