மகரம் - வார பலன்கள்

Update: 2022-11-17 19:31 GMT

எழுத்துத் திறன் கொண்ட மகர ராசி அன்பர்களே!

வெள்ளிக்கிழமை அன்று சந்திராஷ்டமம் உள்ளதால் கொடுக்கல் - வாங்கலில் நிதானம் தேவை. கவனமாக இருந்தால் நல்ல வரவுகள் ஏற்பட வழி பிறக்கும். இதுவரை இருந்து வந்த குறைகள் நீங்கும். மனைவி வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். மின்சாரப் பொருட்களை வாங்கும் போது அதிக கவனம் தேவை. ஆபரணங்களை தற்போது மாற்ற வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் பிரச்சினை வரலாம். பங்குச்சந்தையில் புதிய முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழிலில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், எரிச்சலை வெளிக்காட்டாதீர்கள். உடன் பிறப்புகளிடம் கருத்துவேறுபாடு உண்டாகக்கூடும். சிலருக்கு தொலைந்த பொருள் கிடைக்க வாய்ப்புண்டு. வீடு, நிலத்திற்கு முன் பணம் கொடுப்பதைத் தவிர்க்கவும். பிள்ளைகளால் ஒரு சிலருக்கு பெருமை வந்துசேரும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை கந்தசஷ்டி கவசம் சொல்லி வழிபட்டால் பிரச்சினைகள் தீரும்.

மேலும் செய்திகள்