சிந்தனைத்திறன் படைத்த மகர ராசி அன்பர்களே!
புதன்கிழமை மாலை 5.50 மணி முதல் வியாழக்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால் சிறுசிறு சச்சரவுகள் தேடி வரக்கூடும். விலை உயர்ந்த பொருள் வாங்குவதையோ, மற்றவர்களுக்கு கடன் பெற்றுத் தருவதையோ தவிர்க்க வேண்டியது அவசியம். தடைபட்ட விஷயத்தில் முயற்சித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு, உயர் பதவிகள் தேடிவரும். அலுவலகத்தில் கேட்டிருந்த கடன்கள் கைக்கு வந்து சேரும்.
சொந்தத் தொழிலில் வேலைப்பளு காரணமாக ஓய்வின்றி உழைப்பீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்றாலும், வழக்கமான லாபமே கையில் கிடைக்கும்.
குடும்பம் சிறப்பாக நடந்தாலும், சிறுசிறு குறைகளும் தலைகாட்டும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள், தீவிர முயற்சியால் புதிய வாய்ப்பைப் பெறுவார்கள். பங்குச்சந்தையில் வழக்கமான லாபம் குறையாது.
பரிகாரம்: பெருமாளுக்கு புதன்கிழமை அன்று துளசி மாலை சூட்டி வழிபாடு செய்தால் எல்லா நலமும் பெறலாம்.