உத்திராடம் 2, 3, 4-ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ம் பாதங்கள்
அனைவருடனும் மலர்ந்த முகத்தோடு பழகும் மகர ராசி அன்பர்களே!
வெள்ளி மற்றும் சனிக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால், கொடுக்கல் - வாங்கலில் கவனம் தேவை. பண வரவு வந்தாலும், செலவு அதிகமாகும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பணியில் சிறு தவறு ஏற்பட்டாலும், உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு இலக்காக நேரிடும். சொந்தத் தொழில் செய்பவர்கள், பணிகளை குறித்த காலத்தில் கொடுக்க முடியாமல் போகலாம். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு, கூட்டாளிகளிடம் சிறு மனவேறுபாடு உண்டாகும். பங்குச்சந்தை வியாபாரம் நல்ல லாபம் பெற்றுத்தரும். கலைஞர்கள், தங்கள் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவார்கள். பணவரவு குறைவாக இருந்தாலும், தொழிலில் திருப்தி காண்பீர்கள். குடும்பத்தினரிடையே கருத்துவேறுபாடு நிலவும். பழைய கடன்கள் தொல்லை தந்தாலும், பெரிய பாதிப்பு இருக்காது.
பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை அன்று வில்வ மாலை சூட்டி வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.