மனைவி வழி உறவால் அனுகூலம் ஏற்படும். பயணத் தடை உருவாவதுபோல் தோன்றினாலும், இறுதியில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, கவுரவமான பதவி தேடி வரும். நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அவர்களை விட்டு தள்ளி நிற்பது நல்லது. பணிபுரியும் பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் மறையும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானை வழிபடுங்கள்.